་
குமரிக்கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்ததா? 23
மக்கள் சீமைப் புளி,பப்பரப் புளி, யானைப் புளி எனப் பலவாறாகப் புனைபெயரிட்டுக் குறிக்கின்ற னர் என்றும் கால்டுவெல் கூறுகின்றார். இம் மரம் இந் தியாவுக்கு இத்தனை அருமையாயினும் ஆப்பிரிக்கா வுக்கு மிகப் பொதுப்படையாய் உரிமையுடையது ஆகும்.
இன்னும் செடிகொடி மர வகைகளுள் தேக்குத் தென் இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவிற்கும்; புளி 'சாவகத்திற்கும் இந்தியாவிற்கும்; தென்னை இந்தியா இலங்கை, மேலனேசியா' என்பவற்றிற்கும்; கரும்பு சீனம், இந்தியா, சாவகம் என்பவற்றிற்கும்; நெல் இந்தியாவிற்கும், பர்மாவிற்கும், சீனத்திற்கும், ஜப்பா னிற்கும், சாவகத்திற்கும் பொது உரிமையாய் இருக் கின்றமை காணக.
.
ஆப்பிரிக்காக் கண்டமும் இந்தியாவும் பெரிதும் ஒத்திருப்பதிலிருந்து இலெமூரியாக் கண்டம் ஆப் பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்திருக்க வேண்டு மென்பதும், கிழக்கிந்தியத் தீவுகளும் ஆஸ்தி ரேலியாவும் ஒத்திருப்பதிலிருந்து இலெமூரியா ஆஸ்தி ரேலியா வரை ஒரு காலத்தில் எட்டி யிருக்கவேண் டும் என்பதும், பஸிபிக் தீவுகள் வட அமெரிக்காவில் காலிபோர்னியப் பகுதியுடன் ஒற்றுமை யுடை யவையா யிருப்பதால் இலெமூரியா அதனை ஒருவகை யில் உள்ளடக்கி இருந்தது என்பதும் விளங்கும். இலெமூரியாக் கண்டத்தின் மூலமாக ஆப்பி ரிக்கா இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருந்தது பெர் மியன், மயோஸின்' காலங்களில் என்றும், ஆஸ்தி.
3
1Java. 2 Melanesia. 3 Permian. 4 Miocene.