பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

குமரிக் கண்டம்

ரேலியாவுடன் இணைக்கப்பட்டிருந்தது பலயோஸோ- யிக் காலங்களில் என்றும் கருதப்படுகிறது.

2

இன்றைய உலகப் படத்தை எடுத்துப் பார்த்தா லுங்கூட இந்தியாவும் ஆப்பிரிக்காவும் முன் இணைக் கப்பட்டிருந்தன என்று காட்டும் அறிகுறிகளைக் காணலாம். இந்தியாவின் மேற்குக் கரையிலிருந்து ஆபிரிக்காவி னருகிலுள்ள ஸெசெல்ஸ, மடகாஸ்கர், மோரீஸ் வரைக்கும், இலக்க தீவம், மாலதீவம். சாகோஸ்தீவக் கூட்டம். ஸாயாதே முல்லா அதஸ் கரை இவை உட்படப்,பல பவளத் தீவுகளும் மணல் மேடுகளும் காணப்படுகின்றன.

6

இவற்றுள் ஸெசெல்ஸைச் சுற்றி நெடுந்தொலை கடல் 30 அல்லது 40 பாக ஆழத்திற்கு மேலில்லை என்றும், அதன் அடியிலுள்ள நிலம் தட்டையான அகன்ற மணல் மேடே என்றும் டார்வின் என்பவர் குறிப்பிடுகின்றார்.

மேற்கூறிய இத் தீவுகள் அனைத்தும் இந்தியா வையும் ஆப்பிரிக்காவையும் முன் பிணைத்திருந்த நிலப்பகுதியின் முதுகெலும் பென்ன லாகும்.

ஆல்பிரட் வாலஸ்" என்பவர் இலெமூரியாக் கண் டம் பிற்றை நாட்களில் இருபிளவாகப் பிளந்து இரு ரு கண்டங்களாய் விட்டது என்றும், அப் பிளவு கிழக் கிந்தியத் தீவுகளினூடு சென்று அவற்றை இருவேறு நிலைப்படப் பிரித்தது என்றும் கூறுகிறார்.

மேல்

இதன்படி கிழக்கிந்தியத் தீவுகளில் பக்கத்திலுள்ள ஸுமாத்ரா," ஜாவா, போர்னியோ

8

.

12

4

9 Dar

1 Palaeozoic 2Seychelles. "Mauritius. Lacadives. "Maldives. "Sagos. Sayade Mulla. Adas Bank. win. 10 Alfred Wallace. 11Sumatra, 12 Java.

13Borneo.