பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குமரிக்கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்ததா? 25

முதலிய பெரிய தீவுகள் கிழக்குப் பாதியை அதாவது இன்றைய ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்தவை என் றும், கீழ்ப்பக்கமுள்ள ஸெலிபீஸ், மொலுக்காஸ்,2 நியூ கினி, ஸோலமோன்' தீவுகள் முதலியவை கிழக்குப் பகுதி அதாவது இன்றைய ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்தவை என்றும் ஏற்படுகின்றன.

இவ்விரு பகுதிகளையும் பிரிக்கும் நீர்நிலை பலிஜ் யாம்பக் தீவுகளி னிடையே யுள்ள கால்வாயேயாகும் என ஆல்பிரட் வாலஸ கூறுகிறார்.

உயிரின வகைகளுள் இலெமூரிய நாட்டிற்குச் சான்றுகளாவன இலெமூரியாக் கண்ட அமைப்பைச் சுற்றி யிருக்கும் நாடுகள் அனைத்திலும் காணப்படும் அரிமா, கழுதைப்புலி, சிறுத்தை, நரி, புள்ளிப்புலி, கலைமான், மடமான்' முதலியவைகளும் இன்னும் இவைபோன்ற பிற விலங்குகளுமே.

இவற்றுள் அரிமா இந்தியாவிலும் ஆப்பிரிக்காவி லும்; காண்டாமா மலேயாவிலும் ஆப்பிரிக்காவிலும்; யானை பர்மா, இலங்கை, இந்தியா, ஆப்பிரிக்கா என் னும் இவற்றிலும் வாழ்வது காண்க.

மேலும் தென் கண்டத்திற்கே சிறப்பாகக் காணும் காரன்னம்' தமிழ்நாட்டில் முன்னாள் இருந்தி ருக்க வேண்டுமென்று தெரிகிறது. "ஒதிம விளக்கின்" என்ற பெரும்பாணாற்றுப் படைத் தொடருக்கு உரை கூறுமிடத்து நச்சினார்க்கினியர் ஈண்டுக் காரனன மென்றுணர்க என்றும், வெள்ளையன்னம் காண் என்ற சீவக சிந்தாமணிப் பகுதி உரையில்

மின்"

1 Celebes, 'Moluccas, ¿New Guinea, 4 1 Solomon. "Cazelle. "Sandgrouse, Indian Bustard and Scaly anteater. 7 Black Swan.