26
குமரிக் கண்டம்
"காரன்னமு முண்மையின் வெள்ளையன்னம் இனம் சுட்டிய பண்பு என்றும் கூறியுள்ளார்.
>>
நீர்நாயுள் நில வாழ்வுடைய தொருவகை தென் கண்டத்துள் நீரெலி என்று அழைக்கப்படுவதாகவும் அதன் மயிர் நூற்க உதவுவ தென்றும் கூறப்படுகிறது. ஐங்குறு நூற்றில்,
"பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉம் ஊர'
33
என்ற இடத்து நீர்நாய் என்றது மருதநிலத்து ஆற்றி னிடையுள்ள நீர்நாயாகும். இதனோடு சிலப்பதிகாரத் துள் எலிமயிரினின்றும் ஆடை நெய்யப்பட்டதாகக் கூறுவதை நோக்க, அந் நீர்நாய்க்கு நெருங்கிய உற வான நீரெலியும் தமிழ்நாட்டில் இருநததென நினைக்கவேண்டி யிருக்கிறது.
இந்துமாக்கடற் பகுதியைச்சேர்ந்த நிலப் பகுதிக ளிலேதான் பாம்புகளில் பல்வேறு வகைகளும் காணப் படுகின்றன. அவற்றுள் இந்தியாவில்மட்டும் இரு. நூற்றுமுப்பது வகைகள் உள்ளன என்று கூறுகின்ற னர். இவற்றுள் மிகப் பெரிய இனம் தென்அமெரிக் காவிலுள்ள அனகொண்டாவும்,1 இந்தியாவிலும் மலேயாவிலும் உள்ள பாந்தளுமே.2 வை முப்பது அடி நீளமுள்ளவை.
நச்சுப் பாம்புகளுள் மிகக் கொடியதும், பெரிய தும் இந்தியாவிலுள்ள அரச நாகமேயாம். இது பதி னெட்டு அடி நீளமுள்ளது. இது பர்மா, தென்சீனம், மலேயா, பிலிப்பைன் தீவுகள்' என்பவற்றிலும் காணப் படும். இதற்கடுத்தபடியாகப் பெரிய நச்சுப்பாம்பு
1Anaconda,
2Python. 3Philippine Islands.