பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

குமரிக் கண்டம்

பது பலரது எண்ணம். மேல்நாட்டுச் சமயவாதிக ளுள் பலர் இன்னும் இதே கொள்கை உடையவரா யிருக்கின்றனர்.

ஆனால் அறிவியலார் உயிர் வகைகள் அனைத் துமே படிப்படியான வளர்ச்சி உடையவை என்றும், முதல்முதல் ஓரறிவுயிர்களாகிய செடி கொடி வகை களும், பின் படிப்படியாக ஈரறிவுயிர் முதல் ஐயறி வுயிர்களும், கடைசியில் மிக உயர்ந்த ஆற்றி வுயிரா கிய மனிதப் பிறவியும் ஏற்பட்டன என்றும் அவர்கள் காட்டுகின்றனர்.

.

இத்தகைய 'படிமுறை வளர்ச்சியில் '1 முது கெலும்பற்ற உயிர்களுக்குப் பின் முதுகெலும் புடை யவையும், அவற்றுள்ளும் முட்டையிடுபவற்றிற்குப் பிந்தியே குட்டியிட்டுப் பால் கொடுப்பவையும் தோன்றின என்றும்; குட்டியிட்டுப் பால் கொடுப்ப வற்றுள்ளும் உயர்ந்தவையான மனிதக்குரங்கு முத லிய இருகால் உயிர்கள் மிகப் பிறகாலத்திலும் அத னினும் ஒருபடி உயர்ந்த அறிவுடைய மனிதப் பிறவி கடைசியிலும் தோன்றின என்றும் அறிஞர்கள் உட லமைப் பாராய்ச்சியினாலும் நிலத் தோற்ற ஆராய்ச் சியினாலும் நிலைநாட்டுகின்றனர்.

ஞால் இயலினபடி பார்த்தாலும் இ படி முறை வளர்ச்சி பொருத்தமாகவே காண்கிறது. மிகப் பழமையான, அதாவது அடிப் பகுதியிலுள்ள நில அடுக்குகளில், புலனறிவிற் சிறுமைப்பட்ட உயிர் களின் குறிகளே காணப்படுகின்றன. படிப்படியாகப் புழுப்பூச்சிகளும்,

1Evolution.

பின் முதுகெலும்புடையவை,