குமரிக்கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்ததா? 29 பறவைகள், குட்டியிடுபவை, இருகாலுயிர் என்பவை களுங் காணப்படுகின்றன.
ஆனால் இவ் விருகாலுயிர்களுக்கும் மனிதனுக் கும் வேற்றுமை மிகுதியா யிருப்பதால் அவற்றிற்கு இடைப்பட்ட இனம் ஒன்று இருக்க வேண்டும் என்று அறிவியலறிஞர்கள் நினைத்தார்கள். அதன்படி தேடியதில் கிட்டத்தட்ட மனிதரது அமைப்பும், மூளை உருவும் உடைய லெமூர்' என்ற உயிர் வகை ஒன்று நடுக்கோட்டுப் பகுதியைச் சுற்றி இருப்பதைக் கூர்ந்து நோக்கி, அந்த லெமூர்களிலிருந்தே மனிதர் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று தீர்மானித்தனர்.
ம
ஆனால் தனித்தனிச் சிதறிக் கிடக்கும் நடுக்கோட் டுப் பகுதி நாடுகளில் தனித்தனி அவை ஏற்பட் டிருக்க முடியாதென்பது கண்டு அவை அனைத்திற் கும் பொதுவான நடுவிடத்தில் அத்தகைய வளர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும் என முடிவு கட்டினர். அப்பொது நடுவிடத்திற்கு "லெமூர்" என்ற அவ் வுயிரின் பெயரையே அடிப்படையாகக் கொண்டு இலெமூரியா என அறிஞர் பெயர் வகுத்தனர்.
சிந்து நாட்டிலும் திருநெல்வேலிப் பகுதியிலும் மிகப் பழைய மண்டை யோடுகளும் கருவிகளும்
கண்டெடுக்கப்பட்டன என்பது மேற்கூறப்பட்டது. சாவக நாட்டில் ஒராங் உட்டாங் என்றும், காட்டுமனி தன் என்றும் கூறப்படும் குரங்கினம் இருக்கும் இடத் துக்குப் பக்கத்தில் மிகப் பழையதொரு மண்டை யோடு எடுக்கப்பட்டுள்ளது.
தென்னாட்டில் காணப்படும் தாழிகளும் ஏனங் களும் மிகப் பழமையைக் காட்டுகின்றன. தென்
1 Lemur.