பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பதிப்புரை

இலங்கையிலுள்ள ஒரு மலை முகட்டில், நடுப்பகல் வேளையில் நின்று இந்துமாக் கடலுள் நோக்கினால், கடலி னடிப்பகுதியில் பொற்கலச மொன்று காணப்படு மென்றும், அஃது இராமாயண காலத்தில் இலங்கையின் மன்னனா யிருந்த இராவணேஸ்வரனின் அரண்மனைக் கலசம் என்றும் மலர் கூறக் கேள்வி. இக் கூற்று உண்மையே யாக; பொய்யே யாக! இந்துமாக் கடலுள் ஒரு பரந்த நிலப்பகுதி அழுந்தி யுள்ளது என்பதை இது குறிக்கும் என்று கொள்வதனா லெய்தும் இழுக்கொன்று மில்லை. கடல்க ளெல்லாவற் றுள்ளும் இந்துமாக் கடல் ஆழம் மிகுந்த தென்பதும், பரந்த தொரு நிலப்பகுதி அக் கடலுள் ஆழ்ந்த காலத்தேதான், உலகில் மிகவும் உயரமானதாகக் கருதப்படுகின்ற இந்திய வடவெல்லையாகிய இமயமலை மேலெழுந்த தென்பதும் மேற் கருத்துக்கு அரண் அளிப்பனவாகும்.

என்பதற்கு

உரை

இனி, தமிழ்ப்பெருங் காப்பியங்களைந்தனுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் வரும் வேனிற் காதையின் முதல் வரியாகிய "நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும் யெழுதிய அடியார்க்கு நல்லார், "தொடியோள்- பெண்பாற் பெயராற் குமரி யென்பதா யிற்று; ஆகவே, தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம்; ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியு மென்னாது பௌவமு மென்றது என்னையெனின் ' என்ற வினாவை எழுப்பிக்கொண்டு, அதன் விடையாகப் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

66

முதலூழி இறுதிக்கண் தென் மதுரையகத்துத் தலைச் சங்கத்து .......நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன் பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முது