பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

குமரிக் கண்டம்

னாட்டார் இந்தியாவுக்குக் கொடுத்த முதற் பெயர் நாவலந்தீவம்' அல்லது 'நாவலந் தண்பொழில்' என் பது ஈண்டுக் குறிக்கத்தக்கது.

நாவலந்தீவம் என்ற தொடரால் ஒரு காலத்து து வட இந்திய ஆசியப் பகுதிகளுடன் ஒட் டாது வடக்கேயும் கடலாற் சூழப்பட்டிருந்தது என் பதும், நாவலந் தண்பொழில் என்ற சொல் வழக்கால் அந்நாள் மனிதர் தொகை குறைவா யிருந்தபடியால் ஊரும் நாடும் அருகிக் காடே நிறைந்து சோலை போல் இருந்தது என்பதும் உய்த்துணரலாகும்.

இந்துமாக் கடற் பகுதியைச் சுற்றி யிருக்கும் இன்றைய மொழிக ளனைத்தையும் ஒப்பிட்டு நோக்கு பவர்க்கு எதிர்பாரா வகையில் அவற்றிடையே ஒரு மைப்பாடுகள் காணப்படுவதும், அவ்வொருமைப் பாடுகளும் இலெமூரிய நடுப்பகுதிக்கு அண்மையில் வரவர மிகுதியா யிருப்பதும், ஒருமைப் பாட்டை ஓட்டிக் கோவைப்படுத்திய கோவைகள் எல்லாம் தென் இந்தியா அல்லது குமரிப்பகுதி நோக்கிக் கிடப் பதும் எல்லாம் இலெமூரியாக் கண்டமொன்றிருந்த தென்பதையே காட்டுகின்றன.

மக்களது சமயம், நாகரிகம், பழங் கதைகள் என்பவற்றிற்கூட இதே வகையான எதிர்பாரா ஒற் றுமைகளை நாம் காண்கிறோம். உலகெங்கும் பரந்து காணப்படும் இலிங்க வணக்கம், கன்னியாகிய உலக அன்னை வணக்கம், ஊழிக் கதைகள், தெய்விகச் சோலைக் கதைகள் என்பவைகளைப் பலகால் உற்று நோக்கினால், அவை, தாமே ஏற்பட்ட ஒரு மைப்பாடுகளா யிருக்க முடியாது என்பது புல்ப் படும்.