குமரிக்கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்ததா? 31
தமிழ்நாட்டா ரறிவில் நெட்டிடை யிட்டு மூன்று
பெரிய கடலழிவுகள் ஏற்பட்டிருந்தன என்றும், அவற்றுள் ஈரழிவுக்கு உட்பட்ட காலத்தை ஒர் ஊழி எனக்கொண்டு நான்கு ஊழிப்பாகுபாடு ஏற்பட்டது என்றும், இவற்றுள் முதலழிவு வடமொழியில் மகா பாரதத்திலும், சதபதம், மச்சம், அக்கினி, பாகவதம் முதலிய புராணங்க ளனைத்திலும் சில சில வேறுபாடு களுடன் கூறப்பட்டுள்ளது என்றும் முன்னர்க் காட்டி உள்ளோம்.
கிட்டத்தட்ட இதே மாதிரியான வெளிக்கதை கள் யூதர், பாபிலோனியர், கிரேக்கர், மெக்ஸிகோவி லுள்ள செவ் இந்தியர், சீனர், கல்தேயர், இலங்கை யர், முதலிய பல நாட்டினரிடையேயும் வழங்கு கின்றன. இவற்றுள் பலவும் அவ்வந்நாட்டு மக்க ளால் சற்றேறக்குறைய கிறிஸ்து பிறக்குமுன் 2500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிகழ்ந்தனவாகக் கூறப் படுவது நோக்கத்தக்கது. இவை ஒரே கடல் கோளைக் குறிப்பனவே யாகும் என்று நினைக்கவேண்டி யிருக் கிறது.
இத்துடன் மலையாளக் கரையில் தமிழ்நாட்டின் மிகப் பழமையான சொற்கள், தொடர்கள், பண்கள், பழக்க வழக்கங்கள், சமயக் கொள்கைகள் பொன் போல் பொதிந்து கிடக்கின்றன என்று வரலாற் றறிஞர் காட்டுகின்றனர். அவற்றுட் சில உலக நாக ரிகத்தின் மிக அடிப்படையான நிலைமையை விளக்குபவை ஆகும்.
ஊமைக்
எடுத்துக்காட்டாக அந் நாட்டினரது கூத்தை எடுத்துக் கொள்வோம். மாந்தர் பேச்சுப் பழக்கம் மிகக் குறைந்திருந்த ஒரு காலத்திலேதான்