பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

குமரிக் கண்டம்

செவிப்புலனால் இன்றறியப்படும் கருத்துக்களனைத் தையும் கட்புலனுக்கு உருவகப்படுத்தும் அரிய கலை யின் தொடக்கம் ஏற்பட்டிருக்க முடியும்.

ஆப்பிரிக்க நீக்கிரோவர் அமெரிக்கச் சிவப் பிந்தியர் முதலியவர்க ளிடையிலும் மனித நாகரிகத் தொடக்கத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய உயர்கலைகள் பல இருந்தன என்பது காணலாகும். அமெரிக்க இந்தியர் தமது கண், மூக்கு, செவி ஆகிய புலன்களை மனிதர் எவரும் வியக்கத்தக்க அளவு கூர்மைப் படுத்தி இருந்தனர் என்பதை அந் நாட்டு வரலாறுகள் விளக்கும்.

அவர்கள் மூக்கு வேட்டைநாய்களுக்கொப்பான மோப்பமுடையவை. செவியும் நாய் முதலிய விலங்கு களுக்கொப்பப் பல கல் தொலைவிலுள்ள சிறு ஒலிகளை யும் கேட்கும். கண்கள் கழுகுகளின் கண்களைப்போல நெடுந்தொலை காணக்கூடியவை. ஆப்பிரிக்க நீக்கி ரோவர் தமது பறையொலியைப் பல்லாயிரக் கணக் கான கல் தொலைவரைக் கேட்கச்செய்யும் ஒரு முறை யை உடையவர் என்று சொல்லப்படுகிறது. மனித நாகரிகத்தில் பின்தோன்றிய மொழிகள் கருவிகள் இவைகள் இல்லாமலே மனிதன் வளர்ச்சியடைந்த இடங்களில் இத்தகைய மனித இயல்புக்கு மாறான புலனறிவு வளர்ச்சி ஏற்பட்டது.

மாந்தரது பழைய பழக்க வழக்கங்களுள் தாய் வழி உரிமை மிகப் பழைய குடிகள்பலவற்றுள் வழங்கி வருகிறது.இன்றும் மலையாளக் கரையில் மருமக்கள் தாயம் என்ற பெயரால் அது நடைமுறையி லுள்ளது குறிப்பிடத்தக்கது. கருநீசியத் தீவுகளிலும் இம்முறை காணப்படுகிறது.