பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குமரிக்கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்ததா? 33

இவ்விடத்தில், தாயம், தாயபாகம் என்பவை வடசொற்கள் அல்ல; தாய் என்ற பகுதியடியாக வந்த தாயம் என்பதற்குத் தாய்வழி உரிமை என் பதே முதற் பொருள்; பின்னர், உரிமை வகை மாறிய பின்னும் வழக்காற்றால் அப் பழைய மொழியே வட மொழிவரையிற் சென்று தந்தை வழி உரிமையைக் கூடக் குறிக்க வழங்கியதென்றறிக.

கோயில்கள், வீடுகள் இவற்றின் அமைப்பிலும் கீழ் நாடுகள் பெரும்பாலும் தமிழ்நாட்டையும். சிறப்பாக மலையாள நாட்டையும் ஒத்திருத்தல் காண்க. பட்டம் விடுதல், சேவல் போர், மஞ்சு விரட்டு (காளைப் பந்தயம்), சொக்கட்டான் விளை யாட்டு முதலிய பல இந்திய விளையாட்டுக்கள் ஜப் பான் முதலிய கீழ் நாடுகள், பழமையான உரோம் நாடு வரையிலும் பரவியிருந்தமையும் அவை இன்று காறும் நடுக் கீழை நாடுகளுக்குச் சிறப்பா யிருக் கின்றமையும் கூர்ந்துணரத்தகும்.

கடைசியாக, ஊர் என்னும் மொழியில் ஓர் அரிய உண்மை காணப்படும். முற்காலத்தில் எரிமலை யும் கடற் பாம்பும், அச்சந்தரும் விலங்கினங்களும் இருந்தன ஆதலின் மக்கள் நிலைவரமாய்க் குடியிருப் பதற்கின்றி ஆண்டாண்டுக் குடியேறுவதும், பின் பிற இடங்களுக்கு ஊர்வதும் வழக்கமா யிருந்தன. அத னாலேதான் ஊர் என்ற பெயர் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.

வடமொழியில் புரம் என்ற சொல்லிலும் இங் தூர், சிங்கப்பூர் என்ற வடநாட்டுப் பிறநாட்டு ஊர்ப் பெயர்களிலும், சால்டியரது தலைநகராகிய ஊர் என் பதிலும் இச் சொல்லின் கிளைகள் காண்க. ஆரிய இ3