குமரிக்கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்த ? 35
யறவை யினங்களும், கங்காரு முதலிய விலங்கினங்க ளும் வேறெங்கும் காணப்பெறாதவை ஆகும். இதை நோக்க, ஆஸ்திரேலியா உலகொடு சார்பு பெற்றிராத ஒரு தனித் துண்டமோ என்று நினைக்கவும் முண்டு.
ஆனால், இந் நினைவு வெறும் உய்த்துணர்வு மட்டு மன்று. அறிவிய லறிஞர்கள் பலர் வான ஆராய்ச்சி யால் இவ் ஆஸ்திரேலியா உண்மையில் ஒரு பொரித் துண்டமே என்கின்றனர். அதாவது, அஃது உலகின் இழுப்புவன்மைக்குட்பட்ட காரணத்தால் உலகின் மீது வந்து விழுந்த ஒரு விண்வீழ் மீனின் சிதைந்த பகுதியேயாம் என்கின்றனர்.
அம் மீன் விழுந்த தாக்கு வன்மையினாலேதான் அதுவரை இருந்த இலெமூரியா கடல்வாய்ப்பட்டதும், அதன் வடக்கிலுள்ள பகுதிகள் உயர்ந்தவையுமாகும். அதோடு கூடச், செங்குத்தாய் அதுவரைச் சுற்றிக் கொண்டிருந்த உலகு, இருபத்தாறு பாகை யளவு சரிந்து ஓடிப், பின் அத்தாக்கு வன்மை குறையக் குறையச் சரிவும் குறைந்து, இன்று இருபத்து மூன் றரைப் பாகை யளவு சரிவில் ஓடுவதும் அதனாலேயே. இன்னும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சென்ற பின் இப்படி ஏற்பட்ட சரிவும் நீங்கிவிடும் என்று அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர்.
இதுகாறும் கூறியவாற்றால் மக்கள் இப் பூவுலகில் தோன்றியது நடுக்கோட்டுப் பகுதியிலேயே என்ப தும், இப் பகுதி மூன்றாம் ஊழி யிறுதியில் கடல் வாய்ப்படத் தலைப்பட்டபோது வடக்கிற் கடல் வற்ற விந்திய மலைக்கு வடக்கில் இப்போதுள்ள பெரு நிலப்
1 Degree.