பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

குமரிக் கண்டம்

பரப்பவ்வளவும் மேற் கிளம்பிய தென்பதும் பெறப் பட்டன.

இதன்பிற் கடற்கோளால் வடக்கு நோக்கித் தள்ளப்பெற்ற தமிழ் மக்கள் மெசபொடேமியா, வட இந்தியா, நடு ஆசியா முதலிய இடங்களுக்குச் சென்றிருக்க வேண்டும்.

அதே சமயம் இலெமூரியாவின் மேல் பகுதியி லுள்ளோர் சிலர் ஆப்பிரிக்காவிற்கும், கீழ்ப்பகுதியி லுள்ளோர் கீழ் ஆசியாக் கரைக்கும். சென்றனர்.இலெ மூரியாவின் கீழ்ப் பகுதியின் ஒரு துண்டே இன்றைய காலிபோர்னியா என்ற வட அமெரிக்கப் பகுதியா

கும்.

மொழி ஆராய்ச்சியாளர் ஆரிய இனத்தாரின் முத லிடத்தையே மனித வகுப்பின் முதலிடமென மயங்கி, மக்கள் முதலிடம் நடு ஆசியா, அல்லது தென் உரு சியா என்று கூறினர் என்றும், அவற்றைத் திருத்திப் பாலகங்காதர திலகர் என்ற வரலாற்றறிஞர் ஆரியர் முதலிடம் வட துருவப்பகுதியே எனக் காட்டினர் என்றும் முன்னர்க் கூறியுள்ளோம்.

இக்கொள்கை இலெமூரியாவினின்றே மக்கள் நாகரிகம் பிறந்ததென யாம் காட்டிய விளக்கத்திற்கு முரணானதன்று. அதனையும் உள்ளடக்கி மேற் சென்று விளங்கும் முழு உண்மையே யாகும். ஏனெ னில், ஆரிய இனத்தவர் வடக்கு நின்றும் தெற்குப் போந்தது கி.மு. 2000 ஆண்டுக் காலத்தில்; அதா வது இன்றைக்கு 4000 ஆண்டுகட்கு முன்னேதான். ஆனால் இலெமூரியா நாகரிக காலமோ இன்றைக்கு 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டு 50,000 ஆண்டு கள் வரையில் ஆகும்.