பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குமரிக்கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்ததா? 87

இலெமூரிய மக்கள் வட துருவம் வரையிற் பர விச் சென்ற காலத்தில் வட துருவமும்,வ்ட பகுதி களும் இன்றுபோல் முற்றும் பனி நிலமா யிருக்க வில்லை. உலகின் நடுச்சூட்டினின்றும் விடுபடும் வகையில் முதலில் குளிர்ந்தது நடுக்கோட்டுப்பகுதியே என்று கூறினோம். வடபகுதி குளிரக் குளிர உயிர் கள் அங்குப் பரவ முடிந்தது. இலெமூரியர் செல் லும் காலத்திலும் அஃது இன்றையளவுக்குக் குளிரா மல் போதிய சூடுடையதாகவே இருந்திருக்க வேண் டும்.

வடதுருவத்தையும் நடு ஆசியாவையும் துருவி ஆராய்ந்த அறிஞர் அவற்றுள் பழமையான நாட்களில் மிக உயர்ந்த நாகரிக மக்கள் வாழ்ந்தனர் என்பதை யும், அவை இப்போதிருப்பதைப்போல் குளிர்ச்சி யுடையவையா யிராமல் செழித்திருந்தன என்பதை யும் காட்டப் போதிய அடையாளங்கள் உள்ளன என்று கூறுகின்றனர்.

இன்று பாலைவனங்களாயுள்ள இராஜபுதனமும், சிந்துவும், மலைநாடாகவுள்ள ஆப்கனிஸ்தானமும், பாரசீகமும், பனிப் பாங்கான சைபீரியாவும் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் பெரிய நகரங்களுட னும் மனித வாழ்க்கைக்கான பல வசதிகளுடனும் இருந்தன என்பதற்கான சான்றுகள் உள.

அப்படியாயின் இவ் வட பகுதிகள் இன்று பனி மூடிப் பாழா யிருப்பானேன்? இதற்கு விடை எளிது. உலக நடுச்சூடு முற்றிலும் தணிந்தபின் உலக மேற் பகுதிக்கு ஞாயிற்றினிடமிருந்தே சூடு கிடைக்கவேண்டும். ஞாயிற்றின் கதிர்கள் நடுப்பகுதி யிலேயே நேராக விழுகின்றன. இருதுருவங்களிலும்