38
குமரிக் கண்டம்
சாய்ந்து விழுவதால், தொலைவு மிகுதியாவதுடன் கதிர்களும் நிலப்பரப்பில் மிகுதியாக விழுவதில்லை.
உலகின் சரிவால் ஆண்டில் ஒரு பாதிக்காலம் துருவப் பகுதிகளில் ஞாயிறு மறைவதும், உலகு சுற் றும் விரைவால் காற்று மண்டலம் துருவப் பக்கத்தில் நெருக்கமாயிருப்பதும் அதன் குளிர்ச்சியை இன்னும் மிகுதிப்படுத்துகின்றன.
இங்ஙனம் துருவம் குளிரக் குளிர வடபகுதி வரையிற் சென்று வாழ்ந்த மக்கள் மீண்டும் தெற்கு நோக்கித் திரும்புவது இயல்பே அன்றோ? அப்போது தான் ஆரிய இனம் தெற்கு நோக்கி வரநேர்ந்தது.
இதனால் தெற்கிலிருந்த இலெமூரியாவிலிருந்து வடக்கு நோக்கிச் சென்ற தமிழ்ச் சார்பான நாகரிகத் தின் ஒரு வழிக்கிளையே திரும்ப ஆரிய நாகரிகமாக ந் நாட்டிலும் வந்தது என்று ஏற்படுகிறது.
வடபகுதியில் வாழு நாட்களில் குளிரினாலும், பிற குளிர்நாட்டு மக்களுடன் கலந்ததாலும், குளிரைத் தடுக்க அணிந்த ஆடை அணிகளாலும், சுற்றுச் சார்புகளின் நிறத்தினாலும் அவர்கள் நிறம் மாறி வெள்ளை நிறத்தவர் ஆயினர்; பின்னர், சூட்டினால் கறுத்து ஆடையணிகள் குறைவாக அணிந்திருந்த மக்களைவிடத் தம்மை உயர்வாக மதித்துக்கொண்ட னர்.