பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ரு. ஞாலநூல் காலப் பகுதிகள்

ஞால நூலின் ஆராய்ச்சிகளால் ஏற்பட்ட முடிபு களைப் பார்ப்பவருக்கு முதன்முதலில் அவை வியப் பாகவே தோற்றும். இன்று மலை இருக்கும் இடம் கடலாகவும் கடலிருக்குமிடம் மலையாகவும் இருந்தன என்பதோ, பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் உலகின் பரப்பு, தட்ப வெப்பநிலை, உயிர்வகை, செடிகொடி வகை முதலியவை இன்றைய நிலைமையி லிருந்து முற்றிலும் வேறுபட் டிருந்தன என்பதோ முதற்கண் நமது பொது அறிவுக்கு ஒத்தவையன் றெனவே படக்கூடும். ஆனால் இவை யனைத்தும் அறிஞர் காரண காரியத் தொடர்புடன் தம் ஆராய்ச் சியால் நிலைநிறுத்திய உண்மைகளே ஆகும்.

பெரும்பாலும் இம் முடிபுகள் நமக்குப் பொருத்த மற்றதாகத் தோற்றக் காரணம் அவை நமது அறிவுக் குட்பட்ட குறுகிய கால எல்லையுட் படாமைதான். வரலாறுகளுள் நமக்குக் கிடைக்கும் மிகப் பழைய சான்றுகள்கூட மேல்நாட் டாராய்ச்சியாளரது முடிபுகளின்படி இரண்டு மூன்றாயிர ஆண்டுகளுக்கு முந்திய காலம் வரையில்தான். நாம் இந் நூலிற் குறிப்பிடும் கால எல்லைகள் அதனிலும் எத்தனையோ டங்கு பழைமையான காலத்தைக் குறிப்பன. அவற் றைப் பற்றிய அறிவு நமக்குப் பெரும்பாலும் ஞால நூலாலேயே ஏற்படுகிறது.

ஞால் நூலின்படி ஒரு காலப்பகுதி என்பது நூறாயிரக் கணக்கான ஆண்டுகள் கொண்டது என் பதையும், அவ்வளவு நீண்ட காலங்களில் நிகழ்ந்த செய்திகளைப்பற்றிய நமது அறிவு அவற்றிடையே