4
பதிப்புரை
குருகும் களரியாவிரையு களரியாவிரையு முள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீயினார் காய்சினவழுதி முதற் கடுங்கோனீறாயுள்ளார் எண்பத்தொன்பதின்மர்; அவருட் கவியரங் கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமாகீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீயினான். அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத் திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும், குமரி யென்னும் ஆற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவத ஆறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின் பாலை நாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குணகாரை நாடும், ஏழ் குறும்பனை நாடு மென்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்ல முதலிய பன்மலை நாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வட பெருங் கோட்டின் காறும் கடல்கொண் டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின், "வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள என்பதனானும், கணக்காயனார் மகனார் நக்கீரனா ருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம் பூரண வடிகள் முகவுரையானும், பிறவாற்றானும் பெறுதும்."
1
இதனால், பரந்ததொரு நிலப்பகுதி இன்றைய குமரி முனைக்குத் தென்பால் முன்னர் இருந்துவந்த தென்பதும், அது பின்னர்க் கடல்கோட் பட்ட தென்பதும், இவ் வரலாற் றுண்மைகள் ஏறக்குறைய கி.பி. ஆயிரம் ஆண்டுகள்வரை யில் தமிழ் நாட்டாரிடையே பரவி வழங்கிவந்தன என்பதும் இலக்கிய வாயிலாக நிறுவப்படும். செங்கோன் றரைச் செலவு" என்று சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சிறு