40
குமரிக் கண்டம்
ஏற்பட்ட நில அடுக்கின் ஆழம், ஆக்கம் முதலிய வற்றைப் பொறுத்தது என்பதையும் நாம் மனத்திற் கொள்ளவேண்டும்.
நெடுங்காலத்திற்கு முன் - கோடி கோடிக்கணக் கான மனித ஆண்டுகளுக்கு முன் - இம் மண்ணுலகம் ஞாயிறென்னும் பாரிய, கொதித்துருகிக் குமுறிநிற்கும் அழல் ஆவிப் பிழம்பின் ஒரு பகுதியாக இருந்து, அஞ் ஞாயிறு தன்னைத்தானே சுற்றும் விரைவாற்றலால் அதனினின்றும் வீசி யெறியப்பட்ட ஒரு பிழம்புத் திவலையே என்று மேலே கூறியுள்ளோம்.
1
ஞாயிறு இத் திவலையினும் பன் மடங்கு பாரியது ஆகலின் அஃது அதன் கவர்ச்சியினின்றும் விலக முடி யாது சற்றுத் தொலைவிலேயே (அதாவது பல் நூறா யிரக் கல் தொலைவிலேயே) நின்று அஞ் ஞாயிற்றின் சுழற்சியாற்றலால் தானும் சுழன்று அதனையும் சுற் றிக்கொண் டிருக்கிறது.
நாட் செல்லச் செல்ல (அதாவது பல கோடி ஆண்டுகளில்) உலகின் மேற்பகுதி குளிர்ந்து இறுகி யது. குளிர்ந்த பகுதியில் ஒருதுண்டே இதனினின்றும் எறியப்பட்டுத் திங்களாயிற்று என்பர் வான இயலார்.
வெளிப் பகுதி இறுகிக் கட்டிப் பொருளான பின்னும் உட்பகுதி உருகிக் கொதித்துக் கொழுந்து விட்டெரியும் அழலாகவே இருக்கிறது. வெளியே வர வர இவ்வழல் நீர்ப்பொரு ளுருவாயும், பின்னும் வெளி வர வரக் கட்டியாய்க் குழம்புருவாயும்,பின் களிபோன் றிறுகியும், இறுதியில் பாறைபோல் கட்டி யான பொருளாயுங் குளிர்கின்றது.
இத்தகைய கட்டியான பாறையே உலகின் மேல் தோட்டில் மிகப் பழைமையான பகுதியாம்.
t