ஞாலநூல் காலப் பகுதிகள்
41
உலகின் மிகப் பழைமையான நிலப்பரப்பு. இப் பாறைகளாலேயே ஆக்கப்பட்டது என்பதும், அத்த கைய நிலப் பரப்புள் தென் இந்தியாவும் ஒரு பகுதி ஆகும் என்பதும் முன்னமே கூறியுள்ளோம்.
இயற்கையின் பலவகையான விளையாடல்களால் இம் மேற்பரப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. இம் மாறுதல்களின் பயனாகவே உலகில் செடி கொடி வாழ்வும், அதனை ஒட்டி உயிர் வகைகளின் வாழ்வும், மனித வாழ்வும் ஏற்பட்டன.
இம் மாறுதல்களுக்குக் காரணமா யிருந்தவை இயற்கை ஆற்றல்களேயாகும். அவை மூவகையின : 1. நில உட்பகுதியின் இயல்பு. 2. நில மேற்பரப்பின் இயல்பு. 3. இதற்கு வெளியிலுள்ள நீர் மண்டலம் ஆவி மண்டலம் இவற்றின் இயல்பு.
1. நில உட்பகுதியின் இயல்பால் ஏற்படும் தலை யான மாறுதல் எரிமலையாம். உலகின் நடுவில் உள்ள அழற்பிழம்பு ஆங்காங்கு மேற பரப்பாகிய போர்வை யில் உள்ள பிளவுகள் வழியாகவோ, மென்மையான பகுதிகளைக் கிழித்துக் கொண்டோ வெளிப்பட்டு, மேற்பரப்புக்கு வெளியே கற்குழம்பு, சாம்பல், பல வகை ஆவி ஆகியவற்றைத் தள்ளுகின்றது. உலகிற் பெரும்பாலான மலைகள் இவ் வகையில் ஏற்பட்ட வையே. இவற்றில் பலவகையான கருப்பொருள்கள் இருப்பதால் இவை மிகவும் செழிப்பான செடி கொடி வளர்ச்சியுடையன ஆகின்றன.
தென் இந்தியாவின் இருபுறமும் உள்ள மலைத் தொடர்களில் மேற்குத் தொடர் இங்ஙனம் எரிமலைக் ளால் ஏற்பட்ட மலைகள் ஆகும். கிழக்குத் தொடர் அவற்றினும் பழைமையானவை என்ப.