42
குமரிக் கண்டம
2. நில மேற்பரப்பியல்பால் ஏற்படும் மாறுதல் கள் நிலப் பெயர்ச்சி, நில அதிர்ச்சி, நில மடக்கு முதலி யன ஆகும். நிலப்பரப்பின் உட்பகுதிகள் மென்மை யாகவும் மேற்பகுதிகள் கட்டியாகவும் இருக்கின் றன என்று கூறியுள்ளோம். மேற்பகுதி ஒரே தொடர்ச்சியாயிருக்கு மிடத்தில் அது கீழ்ப்பகுதியை இறுக்கிக்கொண்டிருக்கிறது. எங்கேனும் மேற்பகுதி துண்டாக நின்றால், கீழ் உள்ள மேன்மையான பகுதி மீது அது சறுக்கி வழுக்கிப்போகும். அங்ஙனம் போவதால் நிலப் பெயர்ச்சி ஏற்படுகிறது.
.
உட்பகுதியின் சூட்டினாலோ, நடுப்பகுதியின் பிழம்பு தாக்குவதனாலோ (எரிமலையாக வெளி வராத இடத்தில்) நில அதிர்ச்சி ஏற்படுகிறது. சில இடங்களில் மென்மையான உட்பகுதி இறுகுவதால் உள்ளிடம் ஏற்பட்டு, அதன்மீது கட்டியான மேற் பகுதி நொறுங்கி வீழ்வதால் பலவகையான நில மடக் குகள் ஏற்படுகின்றன. மலைகள் பல இப்படிப்பட்ட மடக்குகளினாலும் ஏற்படுகின்றன. பாரிய இமயமலை கூட இத்தகைய மடக்கினால் ஏற்பட்டதெனக் கொள் ளப்படுகிறது.
3.நிலப்பரப்புக்கு வெளியிலுள்ள நீர் மண்டலம் கடலேயாகும். ஆவி மண்டலம் உலகைச் சுற்றிலும் பல கல் தொலை உயரம்வரை அதனைப் போர்த்தி ருக்கிறது. ஞாயிற்றின் சூட்டால் கடல் நீர் ஆவியாகி மலைகளால் தடையுண்டெழுந்து உயர்ந்த பகுதியில் சென்று குளிர்வதால் மழை யுண்டாகின்றது. காற் றின் வன்மையாலும் மழையின் வன்மையாலும் நாம் மேற்கூறிய நெருப்புவண்ணப்பாறை பொடி யாகின்றது. சில சமயம் காற்று நெருப்புவண்ணப்