பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஞாலநூல் காலப் பகுதிகள்

45

பல்லாயிர ஆண்டுப் பரப்புடையது. இவ் அடுக்குக ளின் கால அளவைபற்றிக் கொள்கை வேற்றுமை இருக்கக் கூடும். ஓர் அடி மண் இத்தனை ஆண்டுக ளுக்குள்ளேதான் ஏற்படும் என்று ஒரே வரையறை கிடையாது. ஆயினும் பொதுப்படத் திண்மைகூடக் கூடக் கால அளவும் கூடும் என்று கூறலாம்.

தற்கால மேற்பரப்புவரை 5 நில அடுக்குப் பகுதிகள் இருக்கின்றன என்று கூறுகின்றனர். அவற்றின் பெயரையும் திண்மையையும் அவற்றிற் காணும் செடிவகை உயிர்வகை விவரங்களையும் மனித வகையையும் சுருக்கிப் பட்டிகை உருவில் எதிர்ப்பக்கத்தில் தருகிறோம்.

ஆக 132,500 அடி ஆழமுள்ள உலக மேற் பரப் பில் வரலாற்றுக் காலம் என நாம் கொள்ளும் ஆரிய நாகரிக காலமாகிய 4000 ஆண்டுகளுக்குரிய மேல் டுக்கு 500 அடியளவே யாகிறது. அதற்கு முன்னைய அத்லாந்திய நாகரிகம் அதனினும் பத்துப் பங்கு திண்மையுடையது. எனவே இவ் வரலாற்றுக் காலத்தினும் நீண்ட அளவு காலம் அத்லாந்தியர் வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. டப்ள்யூ எஸ். ஸ்காட் எலியட் என்பார் அத்லாந்தியர் நாகரிக காலம் இன் றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் 40,000 ஆண்டுகட்கு முன் வரை என்கிறார்.

இலெமூரியர் காலத்து நில அடுக்கு அத்லாந்தியர் கால அடுக்கினும் மும்மடங்காகின்றது; அதாவது 15,000 அடி. ஸ்காட் எலியட் இதன் கால எல்லை இன்றைக்கு 200,000 ஆண்டுகட்கு முன்னர் 50,000 ஆண்டுகட்கு முன் வரை என்கிறார்.