பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




க.

௬. உலக மாறுதல்களும் இலெமூரியாக் கண்டமும்

எல்லையற்ற காலப் பரப்பில் ஓர் இமைப்பொழு தென்னும்படி சிறுமையான வாழ்க்கையினை யுடைய மனிதனால் அவ் வெல்லையற்ற காலத்தை எளிதில் உணர முடியாது. அதேபோன்று எல்லையற்ற இடத் தில் ஓர் அணுவான அவனால் அவ்வெல்லையற்ற இடத் தையும் உணர முடியாது. ஆயினும் அறிவியல் அறி ஞரின் அறிவுக் கண் பார்வை மனிதனது இடச் சிறு மையையும் காலச் சிறுமையையும் கிழித்துக்கொண்டு எல்லையற்ற காலத்தையும் இடத்தையும் அளந்தறி வதா யிருக்கிறது.

பொறுமையுடன் இவ் எல்லையற்ற காலத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை ஆராயும் அறிஞர் உலகின் மேற் பரப்பும் கண்டங்களும் இன்று உலகப் படத்தில் காண்பன போல் என்றும் இருக்கவில்லை யென்றும், இன்று நிலமிருக்குமிடம் கடலாகவும் கடலிருக்கு மிடம் நிலமாகவும் மலையிருக்குமிடம் வெளி நிலமாக வும், வெளி நிலமிருக்குமிடம் மலையாகவும் மாறிமாறி வந்திருக்கிறதென்றும் உணர்கின்றனர்.

கடல்

இத்தகைய மாற்றங்கள் சில சமயம் கோள்களால் நிகழும். சில சமயம் எரி மலைகளால் கடலுள்ளிருந்து நிலமும், நிலத்தினுள்ளிருந்து மலை களும் மேலெழுப்பப்படும். இன்னும் சில சமயம் மேற்பரப்பும் சாய்வுற்றுப் பள்ளமான இடம் மேடாக வும் மேடான இடம் பள்ளமாகவும், கடலுள் பட்ட இடம் கடலுக்கு வெளியாகவும், வெளியில் உள்ள நிலம் கடலுள்ளாகவும் மாறுதலுண்டு. மாறுதலுண்டு. இன்னும் சில சமயம் ஒரு கண்டத்தின் மீது ஒரு கண்டம் சரிவ