பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக மாறுதல்களும் இலெமூரியாக் கண்டமும் 47

தும், இரு கண்டங்கள் ஒன்றாக ஒட்டுவதும், கண்டங் கள் நீரில் மிதந்து செல்வதும் உண்டு.

இம்மாறுதல்களுள் பல இன்னும் பஸிபிக் கடல் புறத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மனி தர் அறிவுக்கு எட்டும்படியான அளவு விரைவில் இங்குத் தீவுகள் தோற்றுவதையும் மறைவதையும் காணலாம். இம் மாறுதல்கள் அங்கங்கே ஒழுங்கு முறையின்றி நிகழ்பவையல்ல என்று ஆராய்ச்சியாளர் நமக்குக் கூறுகின்றனர்.

24 மணி நேரத்திறகு ஒரு முறை ஞாயிற்றின் ஒளி உலகைச் சுற்றுவதுபோல உலகைப் பல்லாயிர ஆண்டுகளுக்கு ஒரு முறை கிழக்கிலிருந்து மேற்காக மின்வலி அலைகள் சுற்றுகின்றன. அவை உலகின் எந்தப் பகுதியில் வந்துள்ளனவோ அந்தப் பகுதியில், வட துருவம் முதல் தென் துருவம் வரை, இடை விடாத கொந்தளிப்பும் மாற்றமும் ஏற்படுகின்றன. ஒவ்வோர் அலையும் 80 பாகை அல்லது 6000 கல் அகலத்திற்கு ஆட்சி செலுத்துகிறது.

இம் மாறுதல் அலைகளின் வன்மையினாலேதான் கண்டங்கள் தோன்றுவதும் மறைவதும். இவற்றால் ஒருகால் உலகெங்கும் பரவி யிருந்த இலெமூரியாக் கண்டம் படிப்படியாகச் சிதைவுற்று இறுதியில் கட லுள் மூழ்கியது. இவற்றாலேயே இன்றைய ஆசியா ஐரோப்பாவின் பெரும் பகுதி மேலெழுந்ததும், அத்லாந்திக் கண்டம் உண்டானதும், அது பின் அமிழ்ந்ததும் ஆகிய பெரிய மாற்றங்கள் ஏற்பட் டுள்ளன.

200,000 ஆண்டுகளுக்கு முன் இலெமூரியாக் கண்டத்தின் அமைப்பு ஆராய்ச்சி அறிஞர் முடிவுப்