பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

குமரிக் கண்டம்

படி எவ்வாறிருந்திருக்க வேண்டும் என்பதை உலகப் படம் 1-ல் காணலாம். ஒப்புமைக்காக வேண்டி இப் படத்தில் தற்கால உலக அமைப்பை வெறும் வரை களினாலும் இலெமூரியாவின் அமைப்பை முற்றிலும் கரு நிறப்படுத்தியும் காட்டி யிருக்கிறோம். அதன்படி இலெமூரியாக் கணடம் கிழக்கு 20 பாகை முதல் மேற்கு 80 பாகைவரையிற் பரவிக்கிடந்தது. அதா வது முழுச் சுற்றளவாகிய 360 பாகையில் 260 பாகை இலெமூரியாவின் நீளமே யாகும்.

இன்றைய உலக அமைப்புடன் ஒப்பிட்டு நோக் கினால் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி, இந்து மாக்கடல், தெற்கு ஆசியா, பஸிப்பிக் கடலின் தென் பகுதி, ஆஸ்திரேலியா இத்தனையையும் லெமூரியாக் கண் டம் உள்ளடக்கி இருந்தது. அந்நாளில் இன்றைய ஆசியாவின் பெரும் பகுதியும், ஐரோப்பா, ஆப்பி ரிக்கா, அமெரிக்கா இவையும் பெரும்பாலும் சதுப்பு நிலங்களாகவே இருந்தன. சில பகுதிகள் கடலுள் ஆழ்ந்தும் இருந்திருக்கக் கூடும்.

ஆனால், இப் பழங் கண்டங்கள் அன்று இன்று கிடந்தவண்ணம் கிடக்கவே இல்லை. அமெரிக்கா அன்று ஐரோப்பா ஆப்பிரிக்கா இவற்றுடன் ஒட் டிக்கிடந்தது. இன்றுகூட அமெரிக்காவின் கீழ் கரை யும் ஐரோப்பா ஆப்பிரிக்கா இவற்றின் மேல் கரை யும் ஒன்றுக்கு ஒன்று பொருந்தத்தக்க உருவுடை யவையா யிருத்தல் காணலாம்.

அந்நாளில் நீர் மட்டத்திற்குமேல் உயர்ந்த பகுதி இலேமுரியா ஒன்றே. மற்ற இன்றைய கண்டங்களெல் லாம் நீருள் அமிழ்ந்தும் அமிழாதும் இருந்த சதுப்பு நிலங்களே ஆகும். முதற் படக் காலத்திற்கு 50,000