பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக மாறுதல்களும் இலெமூரியாக் கண்ட

டமும் 49 ஆண்டுகளுக்குப்பின் இன்றைய கண்டங்களிற் சில பகுதிகள் நீர்மட்டத்திலிருந்து நன்கு உயர்ந்திருந்

தன

"அழிந்துபோன இலெமூரியா" என்ற ஆங்கில நூலின் ஆசிரியர், 'இந்நாளில் இலெமூரியர் அக் கண் டங்களைச் சுற்றிப் பார்த்து அவற்றின் படங்கள் வரைந்துவைத்துள்ளனர்' என்றும், 'அவை இன்றும் இருக்கின்றன' என்றும் கூறுகிறார். ஆனால் அந்நாடு களுள் ஒன்றும் அன்று விளைவதில்லை; அன்றி மனித வாழ்க்கைக்கோ உயிர்வாழ்க்கைக்கோ ஏற்றதாக இருக்கவு மில்லை.

ஆகவே, மனிதவாழ்க்கைக்கும் உயிர்வாழ்க கைக்கும் முதல் பிறப்பிடம் இந்த இலெமூரியாவே யாகும். மனித நாகரிகத்தின் தொடக்கமும் இங்கே தான் ஏற்பட்டிருக்கவேண்டும். கிட்டத்தட்ட நூறா யிரம் ஆண்டுகளாக மனிதவகுப்புத் தவழ்ந்து வளர்ந்த தொட்டில் இவ் இலெமூரியாக் கண்டமே எனலாம். அழிந்துபோன இலெமூரியாவின் ஆசிரியர், 'இதற்கு நெடுநாள் முன்னும் மனிதர் இருந்தனர்' என் றும், 'ஆனால் அவர்கள் மனித நிலையில் மேம்பா டடைந் த்து இலெமூரிய நாட்டிலேயே' என்றும் கூறுகிறார்.

டப்ள்யூ. ஸ்காட் எலியட்டும், ருடால்ஃப்

ஸ்டைனரும் 'மனித நாகரிகத்தில் ஏழு வகுப்புகள் உள' என்றும், 'முதல் இரண்டு வகுப்பைச் சார்ந்த மக்களும் இலெமூரியாவுக்கு முந்திய இரண்டு நில ஆக்கக் காலப்பகுதியிலும் வாழ்ந்தனர்' என்றும்,

லெமூரியர் 3-ம் வகுப்பைச் சார்ந்தவர்' என்றும், அவர்களின் பின்வந்த அத்லாந்தியர், இன்றைய ஆரி யர் முதலியவர்கள் 4-ம் 5-ம் வகுப்பைச் சேர்ந்தவர்' என்றும், 'இன்னும் எதிர்காலத்தில் 2 வகுப்புகள் இ. 4