பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பதிப்புரை

நூலும் இதனை வலியுறுத்துவதாகக்

5

கொள்ளக் கிடக்

கின்றது. கடல் கோட் பட்ட இந் நிலப் பகுதியே இந் நில வுலகத்தில் முதன்முதலாக உயிர்கள் தோன்றிய தொன்னிலப் பகுதியாக இருத்தல் வேண்டு மென்று ஆராய்ச்சியாளர் பலர் ருத்தல்வேண்டு கருதுகின்றனர். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றி மூத்த பழங்குடி என்ற கல்லாடர் கருத்தும் இந் நிலப் பகுதியை ஒருவாறு குறிக்கும் போலும் ! குறளுரையாசிரியர் பரிமேலழகர், 'தென்புலத்தார் என்பதற்குப் "பிதிரர்" என்று பொருளுரைத்து, "பிதிர ராவார் படைப்புக் காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி. அவர்க்கிடம் தென்றிசையாதலின் தென் புலத்தாரென்றார்" என்று விரித்துரைத்தது இந் நிலப்பகுதி யில் வாழ்ந்த மக்களையோ என்பது ஆராயத்தக்கது.

அளப்பரிய பெருமையையும், தொன்மைச் சிறப்பையும் அளிக்கவல்ல இவ் வரலாற் றுண்மைகளைத் தமிழ்நாட்டாரிற் பெரும்பாலோர் இன்னும் அறியாதிருப்பதும், அறிந்த ஒரு சிலருள்ளும் ஒரு பகுதியினர் நம்பாதிருப்பதும் தமிழ் நாடு செய்த தவக்குறையேயாம். இவ் வரலாற்றினால் எய்தும் பெருமைக்குரிய தமிழ்மக்களே இவ்வாறு புறக்கணித்தால், சிறப்பிப்பார் வேறு யாரோ?

பெரிதும் வருந்தத்தக்க இப் புறக்கணிப்பு ஒருபுற

மிருக்க,

மேனாட்டாராய்ச்சியாளர்கள் இத்துறையில் துணிந்து இறங்கிப் பல இடுக்கண்களையும் இடர்ப்பாடுகளை யும் பொருட்படுத்தாமல், அரிதில் முயன்று பெரும் பாடு- பட்டு ஆராய்ந்து தேர்ந்து, கடல்வாய்ப்பட்ட தென்னிலப் பகுதியைப் பற்றிய பல பல உண்மைகளை ஆங்கில நூல்கள் வாயிலாய் எழுதி வெளியிட்டுள்ளார்கள். தென்னிந்தியாவின் தென்பகுதியை யடுத்து, " இலெமூரியா" என்று பரந்து பட்ட ஒரு நிலப்பகுதி இருந்த தென்பதும், அதன் மக்கள்

A