பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

குமரிக் கண்டம்

இவற்றிலும் மேம்பாடுடையவையாய்த் திகழும்' என்றும் கூறுகிறார். ஆனால் இவ்வாசிரியர்களே, 'முதல் இருவகுப்பினரும் உடலின்றி உலவி வந்தனர்' என்ற புதுமையான செய்தியையுங் குறிப்பிடுகின்றனர்.

இப் புதுமையான செய்தியை வலிந்து அவ் வாசிரியர்கள் நம்மீது து சுமத்துவதற்குக் காரணம் மனிதர் பிற உயிர்களிடமிருந்து படிப்படியாக

வளர்ந்தனர் என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்பாததேயாகும். மேல்நாட்டுச் சமய நூல்களைப் பின்பற்றி 'மனிதன் கடவுளது தனிப் படைப்பு' என்றும், 'படைப்புக் காலந்தொட்டே படைக்கப்பட்டான்' என்றும் அவர்கள் நிலைநாட்ட விரும்புகின்றனர். அறிவியல் ஆராய்ச்சியில் முதல் இரண்டுகாலப் பகுதியிலும் மனித வாழ்வுக்குரிய அறிகுறி இல்லாமற்போகவே அதினின்றும் அவர்கள், 'மனித வாழ்க்கை பின் ஏற்பட்டது' என்ற நேரான முடிவை ஏற்கவிரும்பாமல், உடலற்ற மனிதர் இருந் தனர் என்ற பொருந்தாச் செய்தியைப் புனைந்து மேற்கொள்ளலாயினர்.

அழிந்துபோன இலெமூரியா" ஆசிரியர், முதன் மனிதர் இலெமூரியாவிலேயே வாழ்ந்தனர்' என்பதை ஒப்புக்கொள்கின்றனராயினும் 'அவர்கள் இலெமூர் என்ற உயிர்வகையுடன் உறவற்றவர்' என்று கூறிய தும் இதேகாரணம் கொண்டுதான் போலும்.'இலெ மூர்கள் மனிதரது முன்மாதிரியாவர்' என்பதைச் சிலர் ஏற்காவிடினும், 'உயிரின வளர்ச்சியில் மனிதருக் கும் பிற உயிர்களுக்கும இடைபட்ட பகுதியையே னும் காட்டுபவை' என்பது ஒரு தலைச் சார்பற்ற அறிஞரால் மறுக்கக்கூடாத உண்மை ஆகும்.