உலக மாறுதல்களும் இலெமூரியாக் கண்டமும் 51
நாம் மேற் குறிப்பிட்ட உலக மாறுதல்களில் மிகப் பழமையான மாறுதல் ஒன்று 100,000 ஆண்டு கட்குமுன் நிகழ்ந்தது. அதனால் இலெமூரியாவின் அளவு சுருங்கியதுடன், அதன் நடுவில் ஏற்பட்ட ஓர் ஆறு வரவர விரிந்து கடலாகி, அமிழ்ந்த கண்டத்தை இரு பெரும் பிரிவாகப் பிரித்தது. அவற்றுள் ஒரு பிரிவு இந்துமாக்கடற் பகுதியும் இன்னொன்று பஸிபிக்மாக் கடற்பகுதியும் ஆகும்.
இதன்பின் 82,000 ஆண்டுகளுக்கு முன்னும், 75,000 ஆண்டுகளுக்கு முன்னும் வேறும் பல பெரு மாறுதல்கள் ஏற்பட்டு அவற்றின் பயனாய் இலெமூரி யாவின் பல பகுதிகள் மேன்மேலும் குறைந்தன. கடைசியில் நின்றது பஸிபிக்மாக்கடலில் கிழக்கு 100 பாகை முதல் 140 பாகை வரையில் உள்ள பகுதியே யாகும். அதுவும் 50,000 ஆண்டுகளுக்குமுன் கட லுள் ஆழ்ந்தது.
இதே காலப்பகுதியுள் ஆசியாவின் பெரும்பகுதி யும் நிலமாக உயர்ந்துவிட்டது. அமெரிக்காக் கண் டம் ஆப்பிரிக்காவிலிருந்து விலகி நெடுந்தூரம் சென்றுவிட இடையில் அத்லாந்திக்மாக் கடல் ஏற் பட்டது.
ய
மடகாஸ்கர் தீவும், தென் இந்தியாவும், பஸிப் பிக் தீவுகளிற் பலவும், இலெமூரியாவின் மீந்த பகுதி கள் ஆகும். இலெமூரியாவில் அழியாது மீந்த இன்னொரு பகுதி, கடலுள் மூழ்கிய பிற பகுதிகளி லிருந்து பிரிந்து நீரில் மிதந்து சென்று ரிக்காவுடன் சேர்ந்துகொண்டது. அவை இரண்டுக் கும், இடையில், அவை சேர்ந்த இடத்தில் ஒரு கடல் இருந்தது என்பதற்கு இன்னும் அறிகுறி
}