பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

கள் உள்ளன.

உதா ஏரியாயிற்று.

குமரிக் கண்டம்

பின்னால், து வற்றி ன்றைய

இலெமூரியா கடலுட்பட்டபின் அத்லாந்திக் கடலின் அடிப்பகுதி அப்போது ஏற்பட்ட உலக மாறுதல்கள் ஒன்றின் காரணமாக மேலெழுந்து நில மாயிற்று. இதனையே அறிஞர் அத்லாந்திஸ் கண்டம் என்பர். இலெமூரியா கடல் கொள்ளப்பட்டபோது அதன் மக்கள் சிலர் ஆப்பிரிக்கா, ஆசியா முதலிய பகுதிகளுக்குச் சென்றனர். இன்னும் சிலர் ஆப்பி ரிக்கா கடந்து அத்லாந்திஸில் குடியேறி அங்கே ஒரு பேரரசு ஏற்படுத்தினர். பதினாயிரம அல்லது இருபதி னாயிரம் ஆண்டுகளுக்குமேல் இவர்கள் ஆட்சியும் நாகரிகமும் மேலோங்கியிருந்தன.

15,000 ஆண்டுகட்குமுன் நேர்ந்த பெருமாறுதல் ஒன்றால் அத்லாந்திஸ் கணடமும் கடலுள் மூழ்கிப் போயிற்று. அதன் மக்கள் தெற்கு அமெரிக்கா, நடு அமெரிக்காப் பகுதிகளில் குடியேறினர். இவர்களே மயநாகரிகத்தையும்,பெரூவிய நாகரிகத்தையும் ஏற்படுத்தியவர். இவ் அத்லாந்திஸ் கண்டத்தின் மீந்த பகுதிகளே இன்றைய அஸோரீஸ் 1 என்று கூறப்படுகிறது.

1

முகம்மதுநபி, இயேசுநாதர் என்பவர்களுக்கு முன்னோர்களான யூதமரபினர் இந்த அத்லாந்திஸ் கண்டத்திலிருந்து வந்தவர்களே. அவர்கள் மொழி களும் ஐரோப்பா ஆசியா முழுவதும் பரந்து கிடக்கும் பின்னிய, துருக்கிய, ஹங்கேரிய, சிதியக்குழு மொழி களும் திராவிட மொழிகளுடன் தொடர்புடையவை யாயிருக்கின்றன என அறிஞர்கள் நினைக்கின்றனர். 1Azores.