உலக மாறுதல்களும் இலெமூரியாக் கண்டமும் 53
இலெமூரியாக் கண்டத்தைப்பற்றி இதுகாறும் கூறிய விவரங்கள் முதற் பகுதியில் யாம் எடுத்துக் காட்டிய தமிழ் நூலுரைகளுடன் எத்துணைப் பொருத்தம் உடையவை என்பதை நோக்குவோம்.
இலெமூரியரின் சமய நிலை நாகரிகம் இவற்றைப் பற்றி மேல்வரும் பிரிவுகளில் கூறுவோம். அவை தமிழர் சமயம், நாகரிகம் இவற்றுடன் பொருந்து மாறும் அதன்மேற் காட்டப்படும்.
சங்கங்களின் வாழ்வுகளைப்பற்றியமட்டில் முதற் சங்கம் இடம் மற்ற முதலூழி இறுதியுள் ஏற்பட்ட கடல்கோளும், இடைச் சங்கம் இடம் மாற மூன்றாம் ஊழியிறுதியுள் ஏற்பட்ட கடல்கோளும் காரணம் என்று கூறப்பட்டன.
இங்கே ஊழி என்று கூறிய காலஅளவை என்ன?
சங்கவரலாறு கூறும் இறையனார் அகப்பொரு ளுரையிலோ வேறிடத்திலோ ஊழியின் அளவை திண்ணமாக இவ்வளவு என்று கூறப்படவில்லை. ஆனால் அஃது ஆயிரக்கணக்கான ஆண்டுகள்கொண் டது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் முதற் சங்கம் நடைபெற்ற கால அளவை 4440 ஆண்டுகள் என் றும் 89 அரசர்கள் அக்காலத்துள் ஆண்டனர் என் றும், இடைச் சங்கம் நடைபெற்ற காலம் 3700 ஆண்டுகள் என்றும் 59 அரசர்கள் அக்காலத்துக்குள் ஆண்டனர் என்றும், கடைச் சங்கம் நடைபெற்றது. 1850 ஆண்டுகள் என்றும் 49 அரசர்கள் அக்காலத் திற்குள் ஆண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது சங்கங்களினிடையே ஊழியிறுதி மாறுதல்களுக்கிட மிருப்பதால் அவை தொடர்ந்து நடக்கவில்லை என்ப தும் தெளிவே.