54
குமரிக் கண்டம்
சொற்போக்கிலிருந்து இவ்வூழிகள் இந்திய வானநூலாரது காலப்பிரிவாகிய நான்கு ஊழிகள் அல்லது யுகங்களே என்று தோற்றுகிறது. தொல் காப்பியம் நச்சினார்க்கினியர் உரையில் வடமொழி மறைகள் மூன்றாம் ஊழி இறுதியில் பாரதப்போர்க் காலத்தில் வாழ்ந்த வியாசரால் ஏற்பட்டவை என்று கூறுமிடத்து ஊழி என்ற சொல்லை இப்பொருளி லேயே வழங்கியிருப்பது காண்க.
மேலும், இரண்டாம் யுகம் அல்லது ஊழியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இராமாயணக் கதையை எழுதிய வால்மீகர் அவ்வூழியில் இருந்தி ருக்க வேண்டிய இடைச் சங்க இடமாகிய கவாட புரத்தையே பாண்டியன் தலைநகரமென்று கூறியதும் க்கொள்கையை வலியுறுத்தும்.
இந்திய வானநூலின்படி நான்கு ய ஊழிகளும் சேர்ந்து நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின் றன. இலெமூரியாவின் பழமைகூட ஸ்காட் எலியட் கூறுகிறபடி 2,00,000 ஆண்டு அளவே பழமை யுடையது. இவ்விரண்டும் பொருத்தமுடையன வாமோ?
இவ் வானநூலாரின் கணக்கை அப்படியே ஏற் றுக்கொள்ளத் தடையாய்த் தோன்றுவது, ஆண்டு களின் தொகை மிகப் பெரிதாயிருப்பதும் ஒவ்வோ ரூழியின் தொகையும் முன்னைய ஊழித்தொகையுடன் பொருத்தமாகவும் வட்டத் தொகைகளாகவும் இருப் பதுமேயாம். ஆனால் பெருந்தொகைகளை மதிப்பள வாகக் கணிக்கையில் கிட்டத்தட்ட வட்டத்தொகைக ளாகவும்,ஒன்றுக்கொன்று பொருத்தமாகவும் அமைப் பது இயற்கையேயாம்.
1