பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக மாறுதல்களும் இலெமூரியாக் கண்டமும் 55

ஞாலநூலின் ஸ்காட் எலியட் என்ற அறிஞர் உலகில் 5 பெருங் கடற் கோள்கள் ஏற்பட்டுள்ளன என்றும், முதலாவது பத்து நூறாயிரம் ஆண்டுகளுக்குமுன்னும், இரண்டாவது எட்டு நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும், 3-வது இரண்டுநூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும், 4-வது 80,000 ஆண்டுகளுக்கு முன்னும், 5-வது 9,500 ஆண்டுகட்கு முன்னும் ஏற்பட்டன என்றும் கூறு கிறார்.

பழமையைக் கணித்தறிந்த

நான்கு ஊழிக் கணக்கு அளவை இதற்கு ஒத்தில்லாவிடினும் கிட்டத்தட்ட இதனுடன் பொருந்தியிருப்பது காண்க. எனவே, அவ்வூழிகளின் அளவை இந்திய வானநூலார் கணக்குப்படி அப் படியே ஏற்றுக்கொள்வது கூடாததொன்றன்று.

ந் நான்கு ஊழிக் கணக்கை வரலாற்றறிஞர் பலர் ஏற்கவில்லை. எனினும், இத்தகையோருங்கூட மூன்றாம் ஊழி இறுதியைப் பற்றியமட்டில் அதன் கணக்கு நம்பத்தக்கதே என்கின்றனர். இவரது ஆராய்ச்சி முடிவை நோக்குவோம்.

இந்திய வானநூலாரின் ஊழிக்கணக்கு இந்திய வானநூல் வகுக்கப்பட்ட பின்னரே ஏற்பட்டது. இந்திய வானநூல் வகுககப்பட்டது கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்த வராஹமிஹிரராலேயே என்று வரலாற்றறிஞர் சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர், வருக்கு முன்னமே வகுக்கப்பட்டது என்கின்றனர். எப்படியும் ஊழிக்கணக்கு ஊழிகளுக்குப் பின்னர்த் தான் ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதற் கையமில்லை. ஆகவே நாட்டாரிடையே நான்கு ஊழிகள் உண்டு என்ற நம்பிக்கையை அடிப்படையாகக்