56
குமரிக் கண்டம்
கொண்டு வானநூலார் தமது நூலாராய்ச்சிக் கிணங் கக் கால அளவை ஏற்படுத்திக்கொண்டனர் என் பதே பொருத்தமானது.
மரபாக
இதன்படி ஊழிகள் வானநூலளவிற் குறைந் தவையாயினும் மக்களிடை நெடுநாள் வழங்கிவந்தபடியால் மிகப் பழைமையுடைய பெரு மாறுதல்களின் நினைவினால் ஏற்பட்டவையே என்று பெறப்படும். அது பல்லாயிரக் கணக்கான ஆண்டு கள் அடங்கியதாக இருக்கக்கூடும் என்றுமட்டுமே நாம் சொல்லமுடியும்.
பொதுப்பட ஊழிகளை வரையறுக்க இதனால் கூடவில்லையாயினும் மூன்றாம் ஊழியிறுதியைப் பற் றிய அளவில்மட்டும் கணித நூலாரது காலவரை யறையை அப்படியே ஏற்றுக்கொள்ள இடமுண்டு. ஏனெனில், புராணங்கள் எழுதப்பெற்றது மூன்றாம் ஊழி யிறுதியில் என்று அப்புராணங்கள் தாமே கூறு கின்றன.
மூன்றாம் ஊழிக்குப் பிந்திய காலங்களிலுள்ள நந் தர்கள், மௌரியர் முதலியோரது வரலாற்றை அது கூறினும் அதனை எதிர்காலத்தில் வைத்துக் கூறுவ தால் அப்புராணம் எழுதத் தொடங்கிய காலம், அதில் நிகழ்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சனமேசய அரசன் காலம, அதாவது நான்காமூழித் தொடக்கம் என்றேற்படுகிறது. இந்திய மரபுரைகளின் வரலாற் றுப்பகுதி என்ற நூலில் பார்கிட்டர்' என்ற வரலாற் றறிஞர் இதே முடிபுக்கு வந்துள்ளார்.
1 Pargiter The Historical Element in Indian Tradi- tion.'