உலக மாறுதல்களும் இலெமூரியாக் கண்டமும் 57
எனவே, மூன்றாமூழி இறுதி என்பது இன்றைக்கு 5000 ஆண்டுகட்குமுன் அதாவது கி.மு.3100-ல் என்று காணப்படும்.
இலெமூரியாக் கண்டம் 200,000 ஆண்டுகட்கு முன் முதல் 50,000 ஆண்டுகட்குமுன் வரை இருந்த தென்றும், 50,000 ஆண்டுகட்கு முன் பெரும்பாலும் அழிந்ததென்றும் கூறினோம்.
அதில் மீதியாகித் தமிழ்நாட்டுடன் ஒட்டிக்கிடந்த பகுதியே குமரிநாடா யிருக்கவேண்டும்.
இலெமூரியாவை விழுங்கிச் சுவை கண்ட கடல் இதனையும் சிறிது சிறிதாக விழுங்கி வந்திருக்க வேண்டும்.
முச்சங்கங்கள் (15,000 ஆண்டுகளுக்குமுன்) அத்லாந்திஸ் கண்டம் அழிந்த நாளிலிருந்து நடை பெற்றிருக்கலாம்; அல்லது இலெமூரியாக் கண்டம் அழிந்தது முதற்கொண்டு தொடங்கியிருக்கலாம். அல் லது இலெமூரியா வாழ்வுகூடத் தமிழர் சங்க கால வாழ்வாகவே இருந்திருக்கலாகும். அங்ஙனமாயின் நாம் மேலே கூறியபடி இந்திய வான நூலாரின் நாலூழிக் கணக்கு அப்படியே ஏற்றுக்கொள்ளத் தக்கதென்பதை ஈண்டுக் குறிப்பிடலாகும்.
மேல் வரும் பகுதிகளில் இலெமூரிய நாட்டைப் பற்றியும் அதன் மக்களது நாகரிகம், வாழ்க்கை, சமயம், கொள்கை இவற்றைப்பற்றியும் ஆராய்ச்சி யாளர் கூறுவதைத் தொகுத்துரைப்போம்.