பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

பதிப்புரை

நாகரிகம் முதிர்ந்தவரென்பதும், அவர்கள் நாகரிகமும் தமிழர் நாகரிகமும் பலபுடை ஒத்தன வென்பதும், பிறவும்* அவர்கள் ஆராய்ச்சியிற் போந்த உண்மைகள். சிறந்த இவ் வாங்கில நூல்கள் வெளிவந்து ஆண்டுகள் பலவாகியும், தமிழ் மக்கள் அவை தமிழிலில்லாக் குறையால் படித்து உண்மை யுணரும் வாய்ப்பின்றி யுள்ளனர் என்ற பெருங்குறையை அறிந்து அதனை ஒருவாறு நீக்கக் கருதியே குமரிக்கண்டம் என்ற பெயருடன் இந் நூலைத் தமிழில் வெளியிடுகிறோம். தம் தொன்மையும், பெருமையும், தனிச் சிறப்பும் அறியாமல் துயில்கொள்ளுந் தமிழரைத் தட்டி எழுப்ப வரும் இந் நூலைத் தமிழ் நாட்டார் ஏற்றுப் போற்றி ஊக்கம் அளிப்பாராக.

இந்நூலை எளிய தமிழில் பல தலைப்புகளில் விளங்க எழுதியுதவிய இதன் ஆசிரியரவர்களுக்கும், அச்சிடுங்கால், அச்சுப்படிகளைப் பிழை பார்த்துத் திருத்தியும் ஆங்காங்கு வேண்டுங் குறிப்புக்களை உதவியும் செம்மை செய்து கொடுத்த தருமபுர ஆதீன வித்துவான் காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை B.A., அவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.

சென்னை. 17-3-41.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

      • சிவன் கோயில் (Shiva's Temple) என்று வழங்கப் படுகிற ஒரு திட்டு அமெரிக்கக் கானடாவில் இருப்பதாகச் சொல் லப்படுகிறது. இது நூறாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டுள்ளதென ஆராய்ச்சியாளராற் கணக்கிடப்படுகிறது. இதில் பல புதுமை யான விலங்கினங்களும் புற்பூண்டுகளும் காணப்படுகின்றன வெனவும் சொல்லுகிறார்கள். அமெரிக்கப் பல் பொருட்காட்சிச் சாலையார் இத் திட்டிற் புகுந்து ஆராய முயன்று வருகின்றனர். சிவன் கோயில் எனும் பெயர் ஆங்குள்ளமையால் தமிழர் நாக ரிகம் பல்லாயிரம் - ஆண்டுகட்கு முன்பே அமெரிக்கா வரையிற் பரவி யிருந்ததென்பது புலப்படுகிறது.

செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு

கசா பரல் உ

பக்கம் - அ அ.