பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலெமூரியாவின் இயற்கை இயல்புகள்

59

காலத்து இலெமூரியர் தாங்க ஒண்ணாத வெப்பத் துக்கு ஆளாகியே வாழ்ந்துவந்தனர்.

ந் நிலைமையில் அங்கிருந்த குன்றுகளினின்றும் ஒழுகிய சிற்றாறுகளும் ஓடைகளும் இலெமூரிய மக் களுக்கு மிகுந்த ஆறுத லளித்திருக்கவேண்டும்.

இக் கண்டம் வெப்ப மண்டலத்தில் இருந்ததா லும், அதிலும் அந்நாளைய வெப்பமும் மழை வீழ்ச்சி யும் இந் நாளிலும் மிகுதியானதாதலாலும், செடி கொடிகளின் வளர்ச்சி வெப்ப மண்டலத்தில் மழை மிகுதியுள்ள மலைகளில் காணும் காடுகள் போன்று நெருக்கமாகவும் ஓங்கியும் இருந்தது. தற்கால மலைக் காடுகள் கூட எனலாம்.

இவ்வகைகளில் அவற்றிற்கீடில்லை

அக் காடுகளில் பெரும்பாலும் சூரலே நிறைந் திருந்தது. ஆனால் அச் சூரல் இன்றைய சூரலை விடப் பல மடங்கு பெரிதாய்ப் பன்னூறடிகள் உயர மாய் வளர்ந்திருந்தது. குடைபோன்று கவிந்து வள ரும் வட துருவ மரங்களும் மிகுதியாய்த் தழைத் திருந்தன.

பெரிய மரங்களுள் யுக்காலிப்டஸ், பாரிய செம் மரம்' முதலியவை செழிப்பாக வளர்ந்தன. இலெ மூரியாவை அடுத்திருந்த ஆஸ்ட்ரேலியா, நியூஸிலந்து முதலியவற்றில் இன்னும் இம் மரங்கள் மிகுதியா யுள்ளன. இவற்றுட் சில மரங்கள் 30,000 ஆண்டள வும் அழியாத வேலைப்பாட்டில் பயன்படுத்தப்பட் டுள்ளன.

வெப்ப மண்டலத்தின் செடிகொடிகளும் உயிர் வகைகளும் பொதுவில்

1

மிகப் பெரியவையாகவே

Eucalyptus, Giant Redwood.