60
குமரிக் கண்டம்
இருக்கும்.இலெமூரியாவிலுள்ள உயிர்கள் இன்றைய உலகில் காணப்படும் எவ்வுயிர்களையும்விடப் பெரி யவை. அந்நாட்டு எறும்பினம் 2 அங்குலம் வரை நீண்டிருந்தது. மூட்டைப்பூச்சி 4 அங்குல அள விருந்தது; அது தன் சிறகுகளால் நெடுந்தொலை பறக்கக் கூடியதாயிருந்தது. இதுபோலவே மற் றெல்லா உயிர்களும் அதன் தற்கால அளவுக்குப் பன் மடங்கு பெரியவை.
4
இலெமூரியா வாழ்க்கைக்காலம் நடுக் கற்கால மாகும். இந் நாள் சதுப்பு நிலங்களிலும், உள்நாட் டுக் கடற்கரைகளிலும், ஏரிக்கரைகளிலும், பிளெயா ஸாரஸ்2 இனமும், இக்தியாஸாரஸ் 3 இனமும் காணப்பட்டன. ஆனால் நாளடைவில் இவ் வுள்நாட் டுக் கடல்கள் வற்ற வற்ற இவ்வுயிரினங்கள் அருகி நிலத்துக்கே உரிய பிற ஊரும் வகைகள் பல்கி வளர லாயின. இவ்வகைக்கு தினோஸாரியா என்று பெயர். வ் வகையுட் சில நிலத்தி லூர்வதோடுகூடப் பறக்க வும் தக்கதாக வௌவால்கள் போன்று தோல்களா லேயே அமைந்த இறக்கைகளை உடையனவாயிருந் தன. இவற்றிற்குப் பெத்ரோதாக்தில்" என்று பெயர். இவற்றுள் மிகச் சிறியவை குருவியளவும், மிகப் பெரி யவை இன்றைய மிகப் பெரிய பறவைகளினும் பன் அகலமுள்ள
மடங்கு பெரியவையாய் 16 அடி
இறக்கைகளை உடையவையாயு மிருந்தன.
தினோஸாரியாவே இலெமூரியாவின் மிகப் பெரிய உயிராகும். அது 100 அடிக்கு மேற்பட்ட நீளமுள்ளது. செடி கொடிகளையும்,உயிர் வகை
1 Mesolithic
2 Pleiasaurus.
4 Dinosauria. 5 Petrodactyls.
5
3 Icthyosaurus.