62
குமரிக் கண்டம்
களையும் அழிக்கும் ஆற்றலில் இதற்கு ஈடு கிடையா தெனலாகும். ஊன் வெறியால் அவை உறுமும் பொழுதும், மரஞ் செடிகளை நெரித்து அவை நட டக்கும் அரவம் கேட்கும்பொழுதும் இலெமூரிய மக்கள் கவலையும் முன்னெச்சரிக்கையும் கொள்ளுவர். அவர் கள் வாழ்க்கையில் நிறைந்த பேரச்சம் இதுவே.
1907-ஜனவரியில் அரசுரிமை நிலயத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேரறிஞர் ரே லாங்கெஸ்டர்' என்ப வர் அமெரிக்கக் கூட்டுறவு நாடுகளின் தென்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பிரோன்டோஸாரஸ் என்ற யிரினத்தின் எலும்புக்கூடு 65 அடி நீளமாயிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மெஸோலிதிக்குக் 3
2
காலத்தின் பிற்பகுதியில் பால்குடி உயிர்கள் முதல் முதலாகத் தோன்றலாயின. அக்காலப் பால்குடி இனங்களும் பாரியவையே. ஆனால் இன்று அகப்பட்டுள்ள கம்பளியானை மாஸ்டொடன் 4 முதலிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் இக் காலத்தினும் பிந்தியவையே. இயோஸின் மியோஸின்' காலங்களிலுள்ளவை.
அவை
இலெமூரியாவில் பறவைகள் மிகுதி. அவற்றின் வகைகளும் பலப்பலவாகும். பலவகைப் பாம்பு களும் இருந்தன என்று தெரிகிறது. கடற் பாம்பு கள் என்ற பெயரைக் கேட்டவுடனே மக்கள் ஒரு தலைமுறைக்கு முன் சிரிப்பது வழக்கம். ஆனால் அத் தகைய உயிர்வகை இருந்தது கட்டுக்கதை யன்று, உண்மையே என்று இன்று ஐயமற விளங்குகிறது.
1Professor Ray Lankester. 2 Brontosaurus. 3Mesolithic. Mammoth. Mommoth. * Mastodon.
5 Eocene, Miocene.