இலெமூரியாவின் இயற்கை இயல்புகள்
63
1931-ல் அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ்' நாட் டில் கண்டெடுக்கப்பட்ட பாரிய எலும்பு இதன் அளவையும் இயல்பையும் காட்டுகிறது. இதன் பெயர் ப்ளையோஸாரஸ் என்பது. இது கிட்டத்தட்ட 75 அடி நீளமுள்ளது. அதன் தலையின் அகலம் ஒன்
ப்ளையோஸாரஸ்
றரை அடி. அதன் கழுத்து மட்டிலும் 25 அடிக்கு மேல் நீளமுள்ளது. இலெமூரியர் நெருங்கப் பெரிதும் அஞ்சிய உயிர் வகைகளுள் இதுவும் ஒன்று.
இலெமூரியாவில் மிகுதியாய் உறைந்த நில உயிர் வகை இலெமூர்" என்பதாகும். இது மனிதரது தோற்றம்கொண்ட ஒருவகைக் குரங்கினம். இதிற் பலவகைக ளிருந்தனவாயினும், சில இடங்களில் தற் கால மனிதர் உயரமாகிய ஆறடிவரை இது வளர்ந் திருந்தது. இதற்குக் குரங்கை விடக்கூட நீண்டவால் உண்டு. ஆனால், மற்ற வகைகளில் அது மனிதரை ஒத்திருந்தது.
இதன் கை விரல்கள் ஐந்தும் குரங்கின் விரல்கள் போல் ஒரே புறமாய் இராமல் மனிதர்களது விரல் களைப்போல் 4 விரல்கள் ஒருபுறமும் பெரிய விரல் எதிர்ப்புறமும் ஆக அமைந்திருந்தன. கால் விரலமைப் பும் குரங்கை ஒத்திராமல் மனிதனை ஒத்திருந்தது.
'Texas State.