பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

குமரிக் கண்டம்

இவற்றைக் கூர்ந்து நோக்கிய பழைய பழங்கால ஆராய்ச்சியாளர் இவ் வினமே அந் நாளைய மனித இனம் என்ற முடிவுக்கு வந்திருந்தனர். ஆனால் இலெமூரிய மக்களின் உயரிய நாகரிகமும், பிறவும் நேராக இன்று அறியப்படுகின்றமையால் இவை மக்களினமல்ல என்று சொல்லப்படுகிறது.

ஆசிரியர் டப்ள்யூ. எஸ். கார்வே என்பார், 'மக்க ளினம் என்றும் குரங்கினத்துடனோ வேறு கீழினத் துடனோ உறவு கொண்டிருக்க வில்லை; படைப்புக் காலத்தில் தானே மனித இனமாகப் படைக்கப் பட்டது' என்று கொள்கிறார்.

எப்படியாயினும் இலெமூரியர் காலத்தில் மனிதர் விலங்குநிலையி லில்லை; மிக உயர்ந்த மனித நிலையி லேயே இருந்தனர் என்பதுமட்டும் கண்கூடு.