பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அ. இலெமூரிய மக்களது நாகரிகம்

மேலே நாம் குறிப்பிட்டபடி, இலெமூர்களே முதல் மனிதர்கள் என்ற தப்பெண்ணத்தின் பய னாகவேதான் இப் பழங் கண்டத்திற்கு அறிஞர் முதலில் இலெமூரியா என்ற பெயரைக் கொடுத் தனர். மனித வகுப்பின் முன் மாதிரி எனக் கருதப்பட்ட இலெமூர்களின் உறைவிடம் என்பது இதன் பொருள். இக்கருத்து, பிழைபாடுடையதென் றும், அந் நாளைய மக்களின் ஏடுகளில் இந்நாடு "மூ வின் "தாய் நிலம்" என்று வழங்கி வந்ததென்றும் ஆசிரியர் கார்வே கூறுகிறார்.

இலெமூரிய மக்கள் தற்கால மக்களைவிடப் பெரி தும் நெட்டையானவர்களே. ஆறடிக்கு மேற்பட்டு ஏழடி வரையிலும் அவர்கள் உயர்ந்திருந்தனர். அவர் கள் உடலின் எடை 160 கல் முதல் 200 கல் வரை என்று கூறப்படுகிறது.

அவர்களுடைய கைகள் இன்றைய மனிதனது கைகளை விட நீண்டவையாகவும், பெரியவையாகவும், சதைப்பற்று மிக்கவையாகவும் இருந்தன. கால்கள் இதற்கொத்து நீட்சி பெறாமல் திரட்சியுடையவை யாய் இருந்தன.

தலை உச்சியில் மயிர் இயற்கையாகவே கட்டை யாக இருந்தது. ஆனால் பின்புறம் நீண்டு வளர்ந்து பலவகையாக அழகுபெற முடிக்கப்பெற் றிருந்தது. மயிர்கள் மென்மையும் பொன்மையும் வாய்ந்தவை.

கல்லில் செதுக்கப்பட்ட சிலைகளினாலும், தோலில் தீட்டப்பெற்ற ஓவியங்களினாலும் அவர்கள் மிகுதியாக அணிகலன் அணியவில்லை என்றும், தலை