66
குமரிக் கண்டம்
முடியைப் பின்னி முடிப்பதையே பேரணியாகக் கொண்டனர் என்றும், அவ்வோர் அணியிலேதானே அவர்கள் தம் பல்வகைப்பட்ட திறங்களையும் திருந் தக் காட்டினர் என்றும் அறிகிறோம்.
அவர்கள் உருண்டு நீண்ட கழுத்துடையவர்கள். சிறு மணிகளாலாகிய மாலை ஒன்றையே அவர்கள் கழுத்தணியாகக் கொண்டார்கள். காலடிகளும், கை களும், அங்கைகளும் மிகப் பரந்திருந்ததோடு விரல் களின் எல்லாக் கணுக்களும் தடையின்றி அசையக் கூடியவையாயிருந்தபடியால் அவர்கள் தற்கால மனி தரைவிட மிக நுண்ணிய வேலைத்திற னுடையவரா யிருந்தனர்.
பெண்கள் ஆடவரைவிட உயரத்தில் சற்றுக் குறைந்தும் பருமனில் சற்றுக் கூடியும் இருந்தனர். ஆடவரைவிட அவர்கள் உருவம் வனப்புடையதா யிருந்தது என்பது எதிர்பார்க்கத் தக்கதே.
ஆடவர் முகம் பெண்டிர் முகம் போன்றே மயிர் அற்றதாய் இருந்தது. ஆனால் பெண்கள் ஒருவகை நாரினால் செய்த முகமூடி அணிந்திருந்தனர். இதன் மூலம் வெயிலின் சூடு அவர்கள் முகத்தை வாட் டாமலும், காற்றுமட்டும் எளிதில் புகும்படியும் இருந்ததனால் ஆடவர்களைவிட அவர்கள் முகங்கள் பொன்நிற மிக்கவையா யிருந்தன.
அவர்கள் காதுகள் இன்றைய மக்களின் காது களைவிடச் சிறியவையா யிருந்தன.மூக்கு மிகவும் சப் பையாகவும் பெரிதாகவும் இருந்தது. கண்கள் பெரி யவை; தெளிவையும் கூர் அறிவையும் காட்டுபவை.
பொதுப்பட அவர்கள் செம்பு அல்லது பொன் நிறமுடையவர்கள். கண்கள் தவிட்டு நிறமும் மயிர்
,