இலெமூரிய மக்களது நாகரிகம்
67
கருமை நிறமும் உடையன. பற்கள் சிறியவையாய் முத்துப்போல் ஒரேபடியினவாய் வெண்மையாக
விளங்கின.
அவர்களது உடலமைப்பில் மிகவுங் குறிப்பிடத் தகுந்த பகுதி நெற்றியேயாகும். இலெமூரியர்களுக்கு இஃது 6 அல்லது 7 அங்குலம்வரை அகன்று உயர்ந் திருந்தது.
து
அதில் மூக்கடியினின்றும் ஒர் அங்குலம் அல்லது ஒன்றரை அங்குல உயரத்தில் வாதுமைப் பருப்பள வில் ஒரு புடைப்பு இருந்தது. இஃது அவர்களுக்கு மிகவும் மென்மையும் நுட்ப ஆற்றலும் பொருந்திய ஒரு புலனா யமைந்தது.
இவர்களுக்கே சிறப்பான இவ் வுறுப்பின் பய னைப்பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளார். இது வேண்டும்பொழுது பிற புலன்களின் தொழிலையே நேரடியாக மனத்துடன் கொள்வது என்றும், நாம் அறியும் (நீளம்; அகலம்; அல்லது உயரம், ஆழம் அல்லது திணமை) என்ற அளவைகளுக்கும் அப் பாற்பட்ட நான்காம் அளவையை உய்த்துணர்வது என்றும், முக்காலங்களையும் பிறர் எண்ணங்களையும் தொலை நிகழ்ச்சிகளையும் அறியும் அறிவுக்கண் என் றும் ஆசிரியர் கார்வே கொள்கிறார்.
எப்படியாயினும் தொல்காப்பியத்தில் மனிதர்க் குச் சிறப்பாகச் சொல்லப்பட்ட ஆறாம் அறிவையும் சிவபெருமானது நெற்றிக் கண்ணையும் இது நினைப் பூட்டுவது காண்க.
இலெமூரியர்கள் வீடுகளும் மற்றக் கட்டிடங் களும் நீண்ட சதுர உருவில் 10 அல்லது 11 அடி உயரமுள்ள சுவர்கள் எழுப்பப்பெற்று அவற்றின்