பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

குமரிக் கண்டம்

மீது கைகள் இறக்கித் தழைகளும் வேயப்பெற்றவை. அவற்றிற்கு வெளியிலும் கூரை 4 அல்லது 5 அடி தொலைவுடையதாயிருந்ததால் உட்பகுதி குளிர்ச்சி யுடையதாயிருந்தது.

வீடுகள் நெருக்கிக் கட்டப்பெறவில்லை ; இடை வெளியிட்டு உடல் நலத்துக்கு ஒத்த முறையில் பெரி யவையாகவும் காற்றோட்டமுள்ளவையாகவும் அமைக் கப்பட்டன.

.

பெரிய பொதுக் கட்டிடங்களும் இந்த மாதிரி யிலேதான் கட்டப்பட்டன. சுவர்கள் இன்னும் உயரமாயிருந்தன. சில சமயங்களில் பல தனிக் கட்டிடங்கள் கூரையிட்ட வழிப்பாதையில் ஒன்றாகப் பிணைக்கப்பட் டிருந்தன.

பாறைகளுக்குள்ளும்

மலைகளுக்குள்ளும்

குடைந்து செதுக்கிய அரிய வேலைப்பாடுடைய கட்டி டங்களும் இருந்தன. இக் கட்டிட வேலைகளில் நாம் மேற்கூறிய 'யுக்காலிப்தஸ், செம்மரம் முதலிய மரங் களின் பகுதிகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன.

கோயில் கட்டுகையில் வளைந்து கவிந்த விமானங் கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் முன் வாயிலில் இரண்டு பிறை வளைவுகள் இருந்தன. அவர்களுடைய சமய, அறிவியல் ஆராய்ச்சிகளை இவ்வளைவுகள் குறிப் பன ஆகும்.

நிலத்திலிருந்து உயர்ந்த மேடை ஒன்றமைத்து அதனைச் சுற்றிக் கொசு முதலிய சிற்றுயிர்கள் தொந் தரவு செய்யாமல் நார்வலை ஒன்றைத் தொங்கவிட்டுப் படுக்கை அமைக்கப்பட்டது. காற்றோட்டத்திற்காக மேலிடம் திறந்தே இருந்தது.

Eucalyptus, Red Wood.