பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலெமூரிய மக்களது, நாகரிகம்

69

உணவு, நெருப்புமீதோ அல்லது வெயில் வன்மை யால் சமைக்கும் கருவி அடுப்புகளின் மீதோ சமைக் கப்பட்டது.

காலைக் குளிப்பும்,கடவுள் வழிபாடும் சமயத்தின் பகுதியாகக் கொள்ளப்பட்டு வந்த நடைமுறைகளா யிருந்தன.

வீடுகள், கோயில்கள், பயிர்ப் பண்ணைகள், தொழில் நிலையங்கள் இவை வேறுவேறு தனியிடங் களில் கட்டப்பட்டன.

தெருக்களும், தலைமைப் பாதைகளும் அமைக்க வேண்டுமிடங்களில், முதலில் செடி கொடிகளை வெட்டி நிலத்தைச் செம்மைப்படுத்தி ஈரமாக்கி அதன்மீது சீமைச் சுண்ணாம்புபோல் தோன்றும் ஒரு வகை வெண்மையான கற்பொடியைத் தூவினர்: காய்ந்தபின் அது தற்காலத்து ஸிமென்டைப்போல் இறுகிவிடுமாம். அவ்விடத்தில் புல் முதலிய செடிகள் வளர்ந்து பாதை கெடுவதில்லை.

ஒட்டகம் போன்ற ஒருவகைப் பெரிய விலங்கின் மீதமர்ந்து அவர்கள் பயணம் செய்தனர். இதனை அவர்கள் வரைந்துள்ள படங்களினின்றும் நாம் அறி கிறோம். இடம்விட்டு இடம் பெயர்வது மிகுதியாக அன்று வேண்டப்படவில்லை.

அவ்வவ்விடங்களில் அவ்வவ் விடங்களுக்குவேண் டிய பொருள்கள் பெரும்பாலும் செய்யப்பட்டு வந்த மையால் வாணிபம் குறைவாகவே நடந்தது. இயற்கை வளப்ப வேறுபாட்டால் உண்டாகாத பொருள்கள் மட்டுமே மற்ற இடங்களிலிருந்து தருவிக்கப்பட்டன.

அக்காலங்களிலும் அவ்வாணிபத்துக்குப் பணம் வழங்கப் பெறவில்லை. பண்டமாற்றே நிகழ்ந்தது.