70
குமரிக் கண்டம்
இலெமூரியர் பெரும்பாலும் ஆற்றின் கரைகளி லேயே வாழ்ந்துவந்தனர். அவர்கள் வாணிபம் பெரும் பாலும் ஆற்றில் படகு மூலமாகவே நடந்து வந்தது.
மேற்கூறிய ஒட்டக இனத்து விலங்கை யன்றி வேறு சில விலங்குகளையும் ஊர்தியாக அவர்கள் பயன்படுத்தினர். நயப்புள்ள நிலங்களில் சில சிறு விலங்குகள் வழுகும் வண்டிகளை இழுத்தன.
வாணிபத்தில் பணங் காசுகளை இலெமூரியர் வழங்கவில்லை என்று மேலே கூறினோம். ஆனால், அதனால் பொன் வெள்ளியே அவர்களுக்குத் தெரி யாது என்பதில்லை. நேர்மாறாகப் பொன்னும் வெள் ளியும் இன்றைவிட அன்று மிகுதி. ஆயினும் அவை பயன்பட்டது அணிகலன்களுக்கு மட்டுமே.
இன்று மிகவும் அருமையாக மேல்நாட்டார் கை யாளுவதும், பொன்னினும் விலைமிக்கதுமான பிளாட் டினம் என்னும் ஒண்பொருள் அவர்களிடை மிகுதி யாக வழங்கியதாய்க் காண்கிறோம். ஆயின், இதுவும் அணிகலன் வகையில் மட்டுந்தான் பயன்பட்டது.
கட்டிட அமைப்பிலும் வேலைப்பாட்டிலும் இலெ மூரியர் தற்கால மக்களைவிட மிகவும் முற்போந்தவர் கள் என்றே சொல்லவேண்டும். அவர்கள் கட்டிட அமைப்புத் திட்டங்கள் மற்ற எல்லோருடைய திட்டங்களையும்விடக் கால எல்லையைக் கடந்து என்றும் நிலவத்தக்க நிலவரத்தன்மை பெற்றவை என்றுங் கூறவேண்டும்.
நெடுநாள் நடைமுறை அறிவாலும், அறிவியல் நுட்பத்தாலும், உள இயல் ஆராய்ச்சியின் மேம்பாட் டினாலும் தம் கண்டத்தின் இயல்பு, அதன் எதிர்கால
விளைவு ஆகியவற்றை அவர்கள் அறிந்திருக்க
.