பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலெமூரிய மக்களது நாகரிகம்

71

வேண்டும். எனவே தமது கண்டம் பல நில அதிர்ச்சி களுக்கும் பெயர்ச்சிகளுக்கும் ஆளாகவேண்டுமென்று கண்டு, தமது திறத்தால், இயற்கையின் அழிவையும் கால் வலிமையையும் வெல்லும் வகையில், கட்டி டங்கள் அமைத்தனர்.

அவற்றின் உறுதிக்கு அவற்றைக் கட்டப் பயன் படுத்திய பொருள்மட்டும் காரணம் அன்று. அதனை அடுக்கும்முறையில் நடுநிலை ஒப்புமை (Centre of gravity) மயிரிழையளவு கூடப் பிறழாமல் பார்த்துக் கொண்ட அவர்கள் நுட்பம் நாம் அழுக்காறடையக் கூடியதேயாகும்.

பெரிய நில அதிர்ச்சி முதலிய இயற்கையின் சீற்றங்களுக்கிடையே அவர்கள் கட்டிடங்களில் சில, 30,000 ஆண்டளவும் அழியாது நின்றுளது என் றால் அவற்றின் உறுதிப்பாடுதான் என்னே!

இக் கட்டிடங்களில் அவர்கள் பயன்படுத்திய கற்கள் கருங்கல்லையும் சலவைக் கல்லையும்விடக் கடுமையும் உறுதியும் உடையவை. இவற்றைப் பிணைக்கும் ஒருவகைக் குழம்பு அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இவ்விரண்டு பொருள்களையும் அவர்கள் சென்ற இடமெல்லாம் நாம் காண்பதால் அவர்களது ஒருமைப்பாட்டை அவை நன்கு எடுத் துக் காட்டுகின்றன.

தென் அமெரிக்கா மேல்கரை, பஜகாலிபோர் னியா, நெவதா முதலிய இடங்களில் இக் கல் அமைந்த வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இன்று இவ்விடங்களில் இக் கல் அகப்படாததை நோக்க, அஃது இலெமூரியாவின் உட்பகுதியிலிருந்தே வந்திருக்கவேண்டும் என்று கொள்ளவேண்டும்.