பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

குமரிக் கண்டம்

இவற்றோடு ஓவியம், மட்பாண்ட வேலை, பயிர்த் தொழிற் கருவி முதலியவற்றிலும், அமெரிக்காவின் மேல்கரை பஸிப்பிக் தீவுகளை ஒத்திருப்பது இலெமூ ரியாக் கண்டத்தின் உண்மைப்பாட்டை வலியுறுத்து வதாகும்.

இலெமூரியரது வாழ்வு இன்றைய ஜப்பானியர் வாழ்வைப்போன்று இடுக்கண் நிறைந்ததாகும். நாட்டின் காற்றுமண்டலமும், நிலமும் பொறுக்க வொண்ணாச் சூடு உடையவையா யிருந்தன. எரிமலை களின் எழுச்சியும், நில அதிர்ச்சியும் ஏற்படுவது இன்ன சமயம் இன்ன இடம் என்றில்லை. காட்டு விலங்குகளும், உயிர் வகைகளும் எங்கும் நிறைந்திருந்

தன்

ஆனால், இத்தனைத் தடைகளிடையேயும், இலெ மூரியர், நெடுங்கால நடைமுறை அறிவால், இயற்கை யைக் கீழ்ப்படுத்திப் பலவகைகளில் தற்கால உலக நாகரிகத்தினும் சிறந்ததென்று சொல்லக்கூடிய உய ரிய நாகரிகத்தை உண்டுபண்ணும் திறனுடையவரா யிருந்தனர்.

.

கருவிகளைக் கையாளுவதிலும் சரி, நிலக்கனிப் பொருள்களில் நமக்குத் தெரியாதவற்றின் உதவி யாலோ அல்லது தெரிந்த பொருள்களையே நமக்குத் தெரியாத வகையில் பயன்படுத்துவதனாலோ அவர் கள் இயற்றிய பொருள்களிலும் சரி, அவர்கள் நம்மை விட அரிய செயல்கள் செய்யக்கூடியவரா யிருந்தனர் என்பது மட்டும் உறுதி.

அவர்களுடைய அரிய கருவிப் பொருள்களுள் சிறந்த குணமுடைய ஒருவகைக் கல்லைப்பற்றி ஓவி யங்களாலும் அவர்களுடைய சில கை எழுத்துப்படி