பக்கம்:குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, 1941.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலெமூரிய மக்களது நாகரிகம்

73

களின் மூலமாகவும் படிக்கிறோம். இக் கல் தண்ணீ ரைத் தன்பக்கம் நின்று மிகுந்த வன்மையுடன் தள் ளும் ஆற்றல் உடையது.

படகின் பின்பக்கம் து நீர்மேல் தொட்டுத் தொங்கவிடப்பட்டால் தண்ணீரைத் தள்ளிப் படகை

ஓட்டுமாம்.

இதேபோன்ற ஏதோ ஒரு கருவியால் அவர்கள் வான ஊர்தியையும் இயக்கி வந்தனர். ஒரு வகை நீராவிக் கருவியும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. காற்றியக்கு கருவியும், காந்த வலியால் இயங்கும் திரிகைக் கருவிகளும் பொது வழக்கில் இருந்தன.

வெயிலின் ஆற்றலை நம்மைவிட இலெமூரியர் பெரிதும் பயன்படுத்தி அதன்மூலம் பகல் வெளிச் சத்தை இரவிலும் தொடரச் செய்ததோடு, தொழில் லைகளுக்கு வேண்டும் தொழில் வலியையும் உண்டு பண்ணினர்.

ஒளியை ஆளும் வகையில் தற்காலத்தவரை நெடுந்தொலை இலெமூரியர் பின்னிடையச் செய்து விட்டனர். அவர்கள் ஒரு மலை முழுவதும், அல்லது ஒரு நாடு முழுவதும் பேரொளி பரப்பும் ஆற்றல் உடையவர்களா யிருந்தனர்.

காலிபோர்னிய நாட்டில், மலையில் இன்றும் அடிக்கடி நெடுந் தொலை வரை எட்டும் ஒளி வீசு கின்றது என்றும், இது மலையில் மறைந்து உறையும் இலெமூரியரினதே எனக் கருதப்படுகின்றதென்றும் ஆசிரியர் கார்வே கூறுகின்றார்.

அவர்கள் இவ்வகையில் தற்காலத்தாராற் கண்டுபிடிக்க முடியாதபடி உண்டுபண்ணிய ஒளிகள் பெரும்பாலும் அண்மையிலேயே நாம் கண்டுபிடித்த