74
1
குமரிக் கண்டம்
இரேடியம் என்ற புதிய பொருளினாலோ அல்லது அதுபோல் இன்னுங் கண்டுபிடிக்கப்படாத நிலப் பொருள் ஒன்றினாலோ ஏற்பட்டிருக்கவேண்டும்.
இலெமூரியர்களிடை எழுத்துப் பயிற்சி திருந்த அமையப் பெற்றிருந்தது. அவர்கள் எழுதியவை எல்லாம் பெரும்பாலும் அவர்க ளறிந்த அறிவியல் செய்திகளே.
தம் நாடு அழியக்கூடும் என்பதை அறிந்த அவர் கள் தமது நெடுநாளைய வாழ்க்கையின் மெய்ப்பய னாகிய அறிவியல் உண்மைகளை என்றுமழியாது பதிவு செய்ய எண்ணி, உலகப் பேரழிவு நேரினும் அசையா உறுதிகொண்ட கட்டுப்பாடுடைய தங்கள் கோயில் களின் சுவர்களில் அவற்றை எழுதி வைத்தனர்.
இவற்றிலிருந்து அவர்கள் எதிர்கால நிகழ்ச்சி களை அறிந்து, பின் வருகின்ற தலைமுறைகட்குத் தமது அறிவைப் பயன்படுத்த விரும்பினர் என்பது நன்கு விளங்குகிறது.
அவர்களைப்பற்றிய எழுத்துச் சான்றுகளில் சிறந் தது கிலமத் அருவியின் பக்கம் கிலமத் ஏரியைச் சுற்றி எழுதப்பட்டவையே. இவற்றை வாசிக்க இவற்றின் ஒலிக் குறியீடு இன்னும் புலப்படவில்லை. ஆயினும் வேறு இலெமூரியர் எழுத்து வகைகளுடன் து ஒத்தே காணப்படுகிறது.
போரில் இலெமூரியர் வில் அம்பு இவற்றை மட்டுமே திறமையுடன் பயன்படுத்தினர் என்று தெரிய வருகிறது. அவர்கள் தற்கால மக்களைப்போல் அழிவு வேலையில் அத்தனைக் கருத்துச் செலுத்தாமல் ஆக்க வேலையில் மட்டுங் கருத்துச் செலுத்தியது குறிப்பிடத் தக்கது.